பக்கம்:காணிக்கை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sū9. க்ள் தெரியாது. அது பிரயாணிகள் மீது பட்டிருக்கும் வெறும் கண்ணடியை மட்டும் சுவை பார்த்தது. தெருவில் இரத்தம் சிந்தவில்லை. கண்ணுடித்துகள்கள் சிந்திக் கிடந்தன. அதற்குப் பிறகு நான் பஸ்ஸில் ஏறு வதைத் தவிர்த்தேன் அது தான் என் ஸ்கூட்டர் இருக் கிறதே, அது தானே மதுவை என்ைேடு பழக்கப் படுத் தியது. அப்பொழுது ஒரு மாணவனைச் சந்தித்தேன். கல்லூரி இல்லையா என்று கேட்டேன். மூடிவிட்டார்கள்' என்று கூறினன். அவனும் எங்கள் பங்குக்கு வந்து பெட்ரோல் போட்டுக் கொள்வான். "கல்லூரி மூ டில்ை பஸ் ஒடுகிறது; பஸ் ஓடினல் கல்லூரி முடுகிறர்கள்' என்று எனக்குள் கூறிக் கொண்டேன். இதை யாரிடம் சொல்ல முடியும் அன்று அவள் பஸ்ஸில் சென்ருள். முரளியை அழைத்துக் கொண்டு எழுமூர் ரயில் நிலையம் அவள் சென்றது; அதுதான் முன்னமேயே சொன்னேன். அவர்கள் ஊரில் மழை பெய்தது; புயல் அடித்தது. சேதம் உண்டா யிற்று; ஆல்ை அவள் வீடு தப்பியது. கட்டுக் கோப்பான மாடி வீடு: மாடி வீடுகளுக்கு அதிகம் சேதம் இல்லை. அந்தப் பக்கத்துப் புளியமரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து விட்டன. சில சமயம் ஆளும் கட்சிகள் தேர்தலில் முறிந்து விழுவது போல அந்தப் புயல் இருந்தது. மின்னல் வேக வேலை நிறுத்தம் ஏற்பட்ட போதுதான். மது வன்முறையாளர் கையில் சிக்கிள்ை; நாட்டில் குழப்பம் ஏற்படுப் பொழுது பொதுமக்கள் பாதிக்கப்படுகிறர்கள். இதை நான் எழுதித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை. பொது மக்கள் என்ருல் சில சமயம் நாம் அதில் அகப்படு 'வதில்லை. அவர்கள் யாரோ என்று விமரிசித்துப் பழக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/110&oldid=786820" இலிருந்து மீள்விக்கப்பட்டது