பக்கம்:காணிக்கை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 இதுவரை மது எனக்கு விளக்கிய அரசியல் தத்துவங் கள் பொதுவாழ்வு நிகழ்ச்சிகளைப் பற்றிய விமரிசனங்கள் இவை எல்லாவற்றையும் விட அவன் சொல்லியதுதான் மிகப் பொருத்தமாக இருந்தது. மது காந்தியின் சிலையைக் காட்டுவாள். இந்த நாடு கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை இது ஒன்றுதான். பகைவனையும் மன்னிக்கும் இயல்பு. இப்பொழுது பகைமையை எப்படி வளர்ப்பது என்ற கலையில்தான் அரசியல் ஈடுபட்டுள்ளது. சில நாளேடுகளில் வரும் கட்டுரைகளை அவற்றைக் கட்டுரைகள் என்ற பெயரில் வெளியிடுகிருர்கள். அவை எவ்வளவு தூரம் தாழ்ந்து கிடக்கின்றன என்பதைப் பார்க்க முடிந்தது. மொழி இவ்வளவு தூரம் தாழ்ந்து போக முடியும் என்பதை அதைப்படிக்கும் பொழுதுதான் தெரி கிறது. சிலம்புக் கூட்டங்களைக் கேட்டிருக்கிறேன். தமிழ் எவ்வளவு உயர்ந்தது என்று அறிந்திருக்கிறேன். அது எவ்வளவு தூரம் தாழ முடியும் என்பதை இந்தப் பத்திரிகை களில் காணமுடிகிறது. அரசியல் எவ்வளவு அடி மட்டத்துக்கு இந்த நாட்டில் போகிறது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது, திரு வி. க. வின் தென்றல் தமிழ் படித்து இருக்கிறேன். அவரும்தான் அரசியல் கட்டுரைகள் எழுதியிருக்கிறர். இவர்களும்தான் எழுதுகிறர்கள். இமயமும் பசுபிக்கடலும் எவ்வளவு வேற்றுமை உடையது என்பதை அங்குச்சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளத் தேவைப்படவில்லை, அதே நிலையைத்தான் எங்கள் நான்கு தெருச்சந்தியில் சந்தி சிரிக்கும் பேச்சுகள் பச்சைத் தமிழில் தம் இச்சைப் படி பேசப்படுகின்றன. இந்த மாதிரி மேடைப் பேச்சுகளும் எழுத்துகளும் உலகத்தில் வேறு எங்காவது உண்டா என்று நினைத்துப் பாாக்கிறேன். நான் என்ன உலக சரித்திரமா படித்து இருக்கிறேன். நேரு இப்படி ஒரு புத்தகம் எழுதி இருக்கிருர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/112&oldid=786822" இலிருந்து மீள்விக்கப்பட்டது