பக்கம்:காணிக்கை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#12 என்று மது சொல்லுவாள். அவள் படித்தவள் அவளுக்குத் தெரியும். அவள் மட்டும் என்ன பழைய சரித்திரத்தைப் பற்றித்தான் பேசமுடியும். இன்றைய சரித்திரம். அதுசரி நாம் போய்ப் பார்த்தோமா என்ன? ஆங்கிலத்தில் , எந்தப் பத்திரிகையிலும் இப்படி வருவது இல்லை என்று அவள் சொல்கிருள். உலக நாடு களில் எங்கேயும் இவ்வளவு தூரம் தாழ்ந்து போனது இல்லை என்று கூறுகிருள். 'மேடைத் தமிழ் தமிழில் உயர்ந்ததைப் போல் எங்கும் உயர்ந்தது இல்லை. அது தாழ்ந்ததைப் போல் எங்கும் தாழ்ந்து இருக்க முடியாது" என்று ஒரு முடிவுக்கு வந்தேன். - - . எல்லாம் முரளியின் தலைக்கட்டுதான் இப்படி என்னைச் சிந்திக்க வைத்தது. இல்லாவிட்டால் இந்தப் பொதுப் பிரச்சனைகளைப் போய் நான் ஏன் பேசப போகிறேன். நான் என்ன அரசியல் வாதியா? அல்லது அரசியலை இலை மறைவாக எழுதும் எழுத்தியல் வாதியா. இரண்டும் இல்லை. இந்தக் கார்களை ஒட உதவும் பெட்ரோல் விற்கும் சாதாரண ஏஜெண்டு. நான் எப்படி இதைப்பற்றி விமரி சிக்க முடியும். என் மகன் மண்டையின் குருதி அதன் மேல் கட்டை நனைத்துக் காட்டிய சிகப்புத்தான் என்னை இவ்வாறு வெளிப்பன்டயாகப் பேச வைத்தது. அவனை உடனே பொது மருத்துவமனையில் சேர்த்து வைத்தோம். புயலுக்குப் பின் விமரிசனம் தொடர்வதில்லை. அமைதி தான் ஏற்படும் என்று சொல்லுவார்கள். அவள் முரளியைப் பற்றிக் கவலைப்பட்டாள். அதாவது அவள் என்னைப்பற்றிக் கவலைப்படவில்லை. மது மாலை நேர விசிட்டராக வந்து சென்ருள். அதற்கு அங்கே தடை விதிக்கப்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/113&oldid=786823" இலிருந்து மீள்விக்கப்பட்டது