பக்கம்:காணிக்கை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இவனுக்கு இதுவே வேல். கிளர்ச்சி நடக்கும்பொழுது இவன் குழப்பங்களை உண்டாக்கிக் கொள்ளை அடிப்பான்: அதற்காக இவன்தான் கல் எறிந்து இருப்பான்" என்ருள். "கற்பனைதானே" என்றேன். அதற்குள் போலீசுகாரர் அவளைத் தடுத்து விட்டார்கள். "உண்மை சார். அவன் கல்லெடுத்து வீசியதைக் கண்டுபிடித்தோம். கையும் களவுமாகத்தான் பிடித்தோம்" என்ருர்கள். நான் நம்பவில்லை, ஆனால் அவன்தான் கடற்கரை யில் மதுவை அன்று வன்முறைக்கு இழுத்தான். அன்று அகப்படவில்லை. இன்று அகப்பட்டான் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். "வன்முறை இருக்கும் வரை அடக்குமுறை அவசியம்' என்ருள் மது. ஆம் அவசியம்தான் என்று எனக்கும் பட்டது முரளியைப் பார்த்தபோது. 4. கடற்கரையில் அந்த மூன்று சிலைகள் அந்த இடத்தில் அசையாமல் நின்றன. காந்தியடிகள் வன்முறைக்குப் பலி யானவர்; சத்தியாக்கிரகத்தில் சுதந்திரம் பெறமுடிந்தது. ஆனல் வன்முறையில் அவர் ஆவி பிரிந்தது. அன்றே அரசாங்கம் விழிப்பாக இருந்து அந்த உத்தமரைக் காத்து இருக்க வேண்டும். - கிளர்ச்சிகள் அவசியம்தான்; ஆல்ை வன்முறை உடன் கலக்கும் போது அது தோற்றுவிடுகிறது என்பதை எண்ணிப்பார்க்க முடிந்தது. மதுவைக் கடைசி முறையாகச் சந்தித்தது அந்த் மருத்துவ மனையில்தான். அவள் மகத்தான தொண்டை அங்குதான் பார்க்க முடிந்தது, மாணவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை அவளைக்கொண்டுதான் அறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/119&oldid=786829" இலிருந்து மீள்விக்கப்பட்டது