பக்கம்:காணிக்கை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அதாவது நான் கருநாடக இசை பாடினேன் என்று சொன்னாளா அல்லது பாடிய பாட்டைப் பாடினேன் என்று சொன்னாளா தெரியவில்லை.

"நான் மறுபடியும் பாடட்டுமா?" என்றேன்.

அவள் பயந்தே போய்விட்டாள். வாழ்க்கையிலே இதைப்போல அவள் எப்பொழுதும் பயந்ததே இல்லை என்கிறாள்.

எதுக்கு அவள் பயந்தாள்? மறுபடியும் அந்தப் பாட்டைப் பாடி விடுவேன் என்று ஒரே பயம்.

"பயப்படாதே நான் பாடமாட்டேன்.

ஒன்று நான் பாடாமல் இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது” என்றேன்.

"என்ன?" என்றாள்.

"நீ பாடவேண்டும்" என்றேன். சிரித்தாள்; வேறு வழி இல்லை. அவள் பாடவேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. அப்புறம் அவள் என் வழிக்கு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எனக்காக அவள் பாடினாள். ஏன் எனக்காக அவள் வாழவும் தொடங்கினாள். அது எப்படி? அதை அப்புறம் சொல்கிறேன்.

சினிமாப் பாட்டு ஒன்று பாடினாள். அதுதான். அவள் ஒரு தொடர்கதையிலே ஜேசுதாஸ் பாடியது, அதுதான் ஆரம்பத்திலே ஹிட். இப்பொழுதும் அதை அவள் மறக்கவே இல்லை. அதை நான் மறந்துவிட்டேன். உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். ‘தங்கச்சி’ என்று ஆரம்பிக்குமே அது. அதுதான் ‘தெய்வம் தந்த வீடு’ சரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/13&oldid=1320681" இலிருந்து மீள்விக்கப்பட்டது