பக்கம்:காணிக்கை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

செய்வதானால் ஆயிரம் உழைப்பாளிகள் இருந்தால் கூடப் போதாதே அழிவு எவ்வளவு எளிது. ஏன் கொளுத்தினார்கள், அவர்கள் கோபத்தைக் காட்ட அப்படிச் சொல்லுகிறார்கள். அது உண்மை அல்ல. இந்த நாட்டுப் பொதுச் சொத்தை மதிக்காததால்தான், ஒரு சில 'உருமாறிகள்' (அதாவது இன்னார் என்று அடையாளம் காண்பிக்க முடியாது) அவர்கள் தான் பொதுமக்கள் சொத்துகளைக் கொள்ளை அடிக்க அந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்கள்; அவர்கள் தான் அந்த அழிவை ஏற்படுத்தினார்கள்; ஏற்படுத்துகிறார்கள். ரொம்பவும் வேதனை தரும் செய்தி.

அதை உடனே மறந்து விடுகிறோம். இதைப் போல திடீர் நிகழ்ச்சிகள் பல தோன்றிக்கொண்டே இருக்கின்றன. எப்பொழுதும் அமைதியின்மை, கலவரம்; ஏன்; எதற்கு என்று சொல்ல முடியாத நிலைமைகள் ஏற்பட்டு விடுகின்றன.

நினைத்தால் டாக்சிஸ்ட்ரைக்; 'ஆட்டோக்கள்’ கூப்பிட்டால் வருகிறவர்கள்; திடீர் என்று மறுத்துவிடுகிறார்கள்.அவர்கள் ஒதுங்கி விடுகிறார்கள்.தெருக்கள் வெறிச் சென்று ஆகி விடுகின்றன. இது எங்கோ போய் விடுமோ என்று பொது மக்கள் பேசிக் கொள்கிறார்கள். எப்படிச்சொல்ல முடியும், அன்று பஸ் ஸ்ட்ரைக். ஒரு வண்டி கூடப் போகவில்லை. மின்னல் வேலை நிறுத்தமாம் அதாவது திடீர் என்று எழுகின்ற பிரச்சனைகள் மின்னல் வேகத்தில் வேலையை ஸ்தம்பித்துவிடச் செய்கிறது. இல்லா விட்டால் அவள் அன்று அவர்கள் கையில் சிக்கி இருக்கத் தேவை இல்லை.

அன்று நான் செல்லவில்லை என்றால் அவள் பெண்மைக்கு இழுக்கு ஏற்பட்டு இருக்கும். அந்த எல்லைக்குள் போவதற்கு முன் என் ஸ்கூட்டர் அவளைக் காப்பாற்றியது. எனக்குச் சில சமயம் பொழுதுபோவது என்றால் இப்படிச் சுற்றுவது வழக்கம். எந்த நோக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/19&oldid=1321127" இலிருந்து மீள்விக்கப்பட்டது