பக்கம்:காணிக்கை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

தோடும் போவது இல்லை. சும்மா ஜாலியாகப் போவது உண்டு.அன்று அவள் அந்தமுரடர்க்ளோடு போராடினாள். கண்ணகியின் சிலையை அங்கே நான் காணவில்லை. அவள் உயிர் பெற்றுப் போராடியதைப்பார்த்தேன்.

நாட்டிலே இன்று திருடு கொள்ளை வன்முறை இவை எல்லாம் பெருகி விட்டன. அவர்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு வந்தார்கள். கட்டுக்கு மீறிய நிலையில் அவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். எந்த வீட்டிலும் 'பூட்டு’ போட்டு வைத்தால் நிச்சயமாக அது உடைபட்டுத் திருடு போகிறது. இந்த நிலை பெருகி விட்டது என்று பேசிக் கொள்கிறார்கள்.

இனி நாட்டிலே பிரச்சனையே வன்முறையும் அடக்கு முறையும் தான் என்று என்னையும் அறியாமல் நினைக்கத் தொடங்கினேன். வன்முறையில் செயல்படுவது என்பது ஒரு பக்கம்; அதை அடக்க அரசாங்கம் துப்பாக்கிச் சூடு வரை செல்வது என்ற நிலைக்குப் போய் விடுகிறது.

இனி ‘ஜனநாயகம்' என்பது அக்கினிப்பரிட்சையில் இறங்கி விட்டது எதற்கெடுத்தாலும் கிளர்ச்சி, அடிதடி கடை மூடுவது, நூற்று நாற்பத்து நான்கு, போகட்டும் ஏதோ ஒர் உயர்ந்த லட்சியத்தை நோக்கிச் சென்றாலும் கவலை இல்லை. சின்ன பிரச்சனைக்கு எல்லாம் கிளர்ச்சி. தனி மனிதர்கள் பதவிவெறி நாட்டு அரசியல் என்ற நிலைக்குத் தாழ்ந்து விடுவதால் தான் இந்த வன்முறைகள் பெருகி விட்டன.

காந்தி அடிகள் காலத்தில் போராட்டம் நடந்தது சுதந்திர இயக்கத்துக்காக நடத்திய போராட்டம் அது. இன்று எதற்கு நடக்கிறது? சமுதாய நன்மைக்கு நடத்தும் போராட்டங்களில் வளர்ச்சி உண்டு.தனிமனிதப் பிரச்சனைகளுக்காக நடத்தப்படும் போராட்டம் அழிவைத்தான் உண்டு பண்ணுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/20&oldid=1321136" இலிருந்து மீள்விக்கப்பட்டது