பக்கம்:காணிக்கை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

"எதிரிகள் எங்கோ இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். இனி நாட்டில் உள்நாட்டுக் கலகம்தான் நடக்கும். முன் இந்து முஸ்லீம் போராட்டம் நடந்ததே அதேதான் வேறு பெயர் வடிவில் இனிக் கால் கொள்ளப்போகிறது. அரசியல் கட்சிக்காரர்கள் வெறிகொண்டு தாக்கிக் கொள்வார்கள்; இந்த நாடு இப்படித்தான் அழியப் போகிறது.”

பெண்ணுக்கு இவ்வளவு அரசியல் தெரிந்திருந்தது அதிசயமாக இருந்தது. அவள் மேலும் சொன்னாள்.

“தேர்தல் முடிந்ததும் ஆட்சி மாறுகிறது. பிறகு அவர்கள் சாதாரண மனிதர்கள். அவர்களை எதிர்பார்ப்பதே அரசியல் என்றால் அதற்குத் தேர்தலே வேண்டாமே” என்று சொன்னாள்.

“ஊழல்கள் விசாரணைகள்”

"அது வேறு. அது அமைதியாக நடத்த வேண்டிய நிகழ்ச்சிகள்: அரசியல் தாக்குதல் நடத்தவேண்டியது இல்லை."

கல்லூரிப் பெண் அரசியல் பேசும் அளவுக்கு இந் நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. இவை எல்லாம் வண்டியிலே போய்க்கொண்டு பேசலாம். அது எப்படி அங்கே பேசமுடியும்?

அதற்காகவே புதிதாகத் திறந்த ‘நீலக்கல்' என்ற பெயரிடப்பட்ட பொது விடுதியில் சாப்பிட்டுக்கொண்டே பேசினுேம். சிலர் சாப்பிட்டுவிட்டுப் பேசு என்பார்கள், பிறகு பேச்சில் எப்படிச்சுவை கலக்கும். பேச்சின் சுவை சாப்பிடுவதிலும், சாப்பிடுவதின் சுவை பேச்சிலும் கலப்பதற்கு இவ்வாறு பேசுவது அவசியம் ஆகிறது.

அவள் பஸ்ஸுக்கு பாஸ் வாங்கி வைத்திருக்கிறாள் என்று நினைத்தேன். அவள் எங்கே வேண்டுமானாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/26&oldid=1321262" இலிருந்து மீள்விக்கப்பட்டது