பக்கம்:காணிக்கை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

போகலாம். மாணவர்களுக்கு அந்தச் சலுகை தந்திருக்கிறார்கள், அதை அவள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவளுடைய நிழற்படத்தை ரசிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக அந்த ‘அட்டை' எங்கே என்று கேட்டேன். அதற்கு அவள் இந்தப் பதில் தந்தாள். அரசாங்கம் தருகின்ற சலுகைகள் எல்லாம் நாம் அனுபவிக்கவேண்டும் என்பது அல்ல; அது நம் சுயமரியாதைக்கு இழுக்கு. பல பேருக்கு அது தெரிவது இல்லை. சம்பளச்சலுகை கிடைக்கிறது என்றால் அதை உடனே வாங்கிவிடுகிறர்கள். வசதி உடையவனும் வாங்குகிறன். இல்லாதவனும் வாங்குகிறன். அரசாங்கம் வேறு நாம் வேறு என்று நினைக்கும் மனப்பான்மை மாறவேண்டும். இம்மாற்றம்தான் உண்மையான நாட்டுப் பற்று. அரசாங்கம் ஏதோ ஆளுகின்ற கட்சிக்குத்தான் சொந்தம் என்று நினைத்துப் பொதுச்சொத்தை அழிப்பதும் இப்படித் தான் என்று அவள் தன் கருத்தை வெளியிட்டாள்.

அவள் பதினைந்து ரூபாய்க்கு ‘அட்டை' வாங்காததே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

"நான் பஸ் கண்டக்டரின் கண்ணுக்கு அட்டையாக இருக்க விரும்பவில்லை" என்று முடித்தாள்.

"நான் உன் போட்டோவைப் பார்க்கத்தான் கேட்டேன், வேறு எதற்கும் இல்லை' என்றேன்.

அவள் சிரித்தாள்.

"நேரில் பார்க்கும்பொழுது போட்டோ எதற்கு?"

அதில் ஒரு ரசனை இருக்கிறது. உள்ளத்தில் படியும் வடிவத்துக்கு ஒர் எழுத்துவேண்டும்;அதுதான் போட்டோ: அது அழகை மட்டும் காட்டும்; உண்மை வடிவம் அவளை முழுவதும் காட்டும் என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/27&oldid=1321267" இலிருந்து மீள்விக்கப்பட்டது