பக்கம்:காணிக்கை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

“இது இப்பொழுதைய Fashion" என்றேன்.

"அதுதான் நீங்கள் எங்களைப்போல் மயிர்முடி வளர்க்கிறீர்கள்"

"பிறகு”

“எங்களைப்போலக் கலர் சட்டை அணிகிறீர்கள்” என்றாள்.

ஆண்களுள் பலர் ஏன் 'பாப்’ முடியும், ‘கட்' சர்ட்டும் அணிகிறர்கள் என்பது அப்பொழுதுதான் விளங்கியது.

எங்கள் எதிரே இரண்டுபேர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களுள் ஒருவர் அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தார். மற்றவர் கேட்டுக்கொண்டிருந்தார். பேசியதைக்கொண்டு அவள் பெண் என்பதை உணர முடிந்தது. பேசாமல் கேட்டுக்கொண்டு இருப்பதைக்கொண்டு அவன் ஆணாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்தேன்.

"இதில் யார் ஆண் பெண்? என்று கேட்டாள்.

"கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றேன்.

அதுதான் இன்றைய நாகரிகப்போக்கு என்றாள்.

'பெண் ஆணைப்போலவே சம உரிமை கேட்கிறாள்." என்றாள்.

“நீ”

"எனக்கு இருக்கும்பொழுது நான் ஏன் கேட்க வேண்டும்' என்றாள்.

“மறுபடியும் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்” என்று முடித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/36&oldid=1325550" இலிருந்து மீள்விக்கப்பட்டது