பக்கம்:காணிக்கை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

வாழ்க்கையில் பிறர் காசு கொடுக்க ஹோட்டலில் உடன் இருந்து சாப்பிடுவது இது முதல் நிகழ்ச்சி; மறக்க முடியாத சம்பவமாக இருந்தது. இந்த நினைவுகளோடு வீட்டுக்கு வந்தேன்.

நான் அவளை ஏமாற்றினேன். அவளுக்கு உதவி செய்தது உண்மை. ஏன் எனக்குக் கலியாணமாகிவிட்டது என்று அவளிடம் சொல்லி இருக்கக்கூடாது.

ஒரு பெண் முதலில் அதைச் சொல்லிவிடுவாள். எனக்கும் கழுத்தில் ஒரு 'தாலி’ காலில் ‘மெட்டி’ இருந்தால் அவள் என்னை உடனே புரிந்துகொண்டிருப்பாள்.

"கழுத்தில் மைனர் செயின்” அதை வைத்துக் கொண்டு அவள் எனக்கு இன்னும் கலியாணம் ஆக வில்லை என்று முடிவு செய்துவிட்டாள். ‘மைனர் செயின்' என்பதற்குப் புதிய விளக்கம் கிடைத்தது. அவள் சொன்னால் கேட்டாளா.

அதுதான் முரளியின் அம்மா.

'நீங்கள் போட்டுக்கொள்ளுங்கள் நன்ருக இருக்கிறது' என்றாள்.

அதாவது நான் ஒரு பணக்கார அப்பாவின் ஒரே மகன். எனக்கு இருக்கிற தகுதியே அதுதான். அதைக் காட்டுவதுபோல் அது என் கழுத்தில் தொங்கிக்கொண்டு இருந்தது. அவளுக்கு அதிலே ஒரு சந்தோஷம். என்னைப் பணக்காரனாக மதிக்கிறதிலே அவளுக்கு சந்தோஷம்.

அதுவே அவளுக்கு அதுதான் ‘நவீன கண்ணகிக்கு' மாறாக நினைக்கும்படி செய்தது. இதுதான் நான் வைத்த பெயர். அப்புறம்தான் தெரிந்தது அவள் உண்மைப் பெயர் மாதவி என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/37&oldid=1325551" இலிருந்து மீள்விக்கப்பட்டது