பக்கம்:காணிக்கை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

எழுநிலை மாடத்தில் வைத்து அழகு பார்த்தான்; அவள் பேசாமல் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். பேசாத பெண்ணிடம் அவன் எந்தச் சுவை காண முடியும்? எப்பொழுதோ ஒரு முறை சிரிப்பாள். கஷ்டம் வந்தால் வெளியே சொல்ல மாட்டாள்.

மாதவி சமுதாயப் பெண்; மற்றவர்களை மகிழ வைத்தாள்; அதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் தனக்கே உரியவளாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். அவள் பாடலை யாரும் கேட்கக் கூடாது எனறு நினைத்தான். எனக்கு என்ன வேலை. இந்த மாதிரித் தமிழ்ப் புத்தகங்களை நிறைய படித்து இருக்கிறேன்.

சிலம்புச் செல்வர்கள் நிறைய நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதையும் சில சமயம் கேட்டு இருக்கிறேன். ஆவேசம் வந்தது போல் பேசுவார்கள். அதைக் கேட்டு எனக்குள் சிரித்துக் கொள்வேன்.

கண்ணகியை ஆகா, ஓகோ என்று அளந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுடைய கருத்து என்ன? கண்ணகி போல இந்த நாட்டில் பேசா மடந்தைகளாக இருக்க வேண்டும். அப்புறம் லபோ, திபோ என்று அடித்துக் கொள்ள வேண்டும்.

மாதவி கோவலனுக்காக அழவில்லை. அவள் அவனைத் தனககுச் ‘சொந்தம்' என்று நினைக்கவில்லை. சமுதாயப் பார்வையில் இருந்து அவள் முடிவை எடுத்துக்கொண்டாள். தன் மகளை இல்வாழ்க்கைப் படுத்த நினைக்கவில்லை. காணார் கேளார் கால் முடப்பட்டார் இவர்களுக்குச் சேவை செய்ய அனுப்பினாள்.

என் மது அடிக்கடி இந்த மேகலையைத்தான் குறிப்பிடுவாள். தமிழ்க் காப்பியங்களிலேயே மிக உயர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/42&oldid=1325557" இலிருந்து மீள்விக்கப்பட்டது