பக்கம்:காணிக்கை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

"பரவாயில்லை. எல்லாம் ஆம்பளை பசங்க."

"சரிதான் சார்! பெண் தான்! படிக்க வச்சாப் போச்சு.”

இப்படிக் கேட்பது அநாகரிகம் என்று சொல்கிறாள்.

ஒரு பெரிய பிரகஸ்பதி இருக்கிறர். அவர் என் பாலிய சினேகிதர். அவர் ஒரு பெரிய பிசினஸ் வைத்து இருக்கிறார். அதாவது ‘பொம்மைகளை உற்பத்தி செய்தல்' அவர் அதிகம் பேசமாட்டார்.

அவரிடம் ஒரு நாள் போயிருந்தேன்.

"உங்க உடம்பு எப்படி?” என்று கேட்டார்.

"நல்லாத்தான் இருக்கிறேன்”

இவர் என்ன வைத்தியரா?

அவசியமில்லாத கேள்வியாகப் பட்டது.

நான் தான் கெட்டிக்காரன் என்று நினைத்தேன். அது இல்லை என்பதை அவள் நிரூபித்து விட்டாள்.

எத்தனையோ நாள் நாங்கள் சந்தித்து இருக்கிறோம். பேசி இருக்கிறோம், எனக்கு அது இனிமையான நாட்கள். இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்.

அவள் சொன்னாள் 'உங்களுக்குக் கலியாணம் ஆகி இருக்கிறது. அது எனக்குத் தெரியும்' என்றாள்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

அவளே சொன்னாள்."அடிக்கடி நேரம் ஆகிவிட்டது” என்று சொல்கிறீர்கள். கடிகாரத்தை அவ்வப்பொழுது பார்க்கிறீர்கள். அதிலிருந்து தெரிந்து கொண்டேன்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/46&oldid=1325664" இலிருந்து மீள்விக்கப்பட்டது