பக்கம்:காணிக்கை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

"திருப்பித் திருப்பி என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் தெரியுமா? இந்தத் திருக்குறள் தான்” என்றாள்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அதை நான் படித்தது இல்லை. பஸ்ஸில் அர்த்தம் தெரியாமல் ஏதோ எழுதி வைத்திருந்தார்கள். அது தான் திருக்குறள் என்று தெரியும்.

"அவர் என்ன அப்படித் தவறாகச் சொல்லி விட்டார் என்று கேட்டேன்.

'தவறு இல்லை மூளையைக் கெடுத்து வைத்து விட்டார். மனிதனைச் சுயநல வாதியாக ஆக்கிவிட்டார்" என்றாள்.

"எப்படி?”

“இல்லறம் துறவறம்” என்ற சொல்லடுக்குகளை நான் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாள்.

"அப்படி என்றால்?”

'அறம் ஒன்று தான் அது மனித அறம். அது இந்தச் சமுதாயத்தில் நீ ஒருவன் என்பது. நீ சேர்ந்தது தான் சமுதாயம் என்பது.தனிமனிதன் இந்தப்பரந்த உலகத்தில் ஒரு பிரஜை. அவன் இந்த உலகத்தை வளமுடையதாக ஆக்க வேண்டும். அழகு படுத்த வேண்டும்.

அதைத் தானே செய்கிறோம்.

ஒவ்வொருவனும் தன் வீட்டைத்தான் கவனிக்கிறான். குடும்பஸ்தனும் வீட்டைப் பற்றியே கவலைப்படுகிறான், துறவியும் 'வீட்டைப்’ பற்றியே கவலைப் படுகிறான் ‘நாட்டைப்’ பற்றி மறந்து விடுகிறார்கள் என்று கூறினாள்.

"நான் உண்மையைச் சொல்லி இருக்க வேண்டும்” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/48&oldid=1325673" இலிருந்து மீள்விக்கப்பட்டது