பக்கம்:காணிக்கை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காணிக்கை


முன்னுரை


நாவல் காலத்தின் விமரிசனம் என்பர்; நம்மைச் சுற்றியுள்ள புறநிகழ்ச்சிகளின் தாக்கங்கள் மனித வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கின்றன. நாம் வள்ளுவர் காலத்தில் வாழவில்லை; வன்முறையும் ஜனநாயகமும் போராடிக் கொண்டிருக்கின்றன. 'எமர்ஜன்சி' நீங்கி ஜனநாயகம் வளரும் காலம் இது; இதற்கு உள்ள சோதனையைச் சித்திரிக்கிற உருவகக் கதை இது.

இனிச் சர்வாதிகாரம் ஆட்சியில் இடம் பெறுமா? ஜனநாயகம் வெற்றி காணுமா என்பது சிந்தனைக்கு உரியது. விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. அழிவுக் கோலம் அவசியமா? அழகுக் கோலம் தேவையா!

கிளர்ச்சிகள் வளர்ச்சிக்குத் தேவைதான். அது வன்முறையில் இயங்கும் பொழுது ஏற்படுகின்ற அழிவுகள் ஏராளம்; அதைச் சுட்டிக் காட்டுவது இந்நாவல்.

'மது ஒழிப்பு’ சமுதாயப் பிரச்சனை: இது ஒரு குடும்பப் பிரச்சனையாகவும் மாறுகிறது. எப்படி? இந்தக் கதையை முடித்துவிட்டு உண்மை காணுங்கள். இது எப்படி? வேறு ஒன்றும் இல்லை. பதினாறு வயதில் கேட்கப்படும் நகைச் சுவைத்துணுக்கு இது.

ரா. சீ.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/5&oldid=1320630" இலிருந்து மீள்விக்கப்பட்டது