பக்கம்:காணிக்கை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

என்னைக் கொண்டாள்; அதாவது கணவனாகக் கொண்டாள். நான் தனியாக விடப்பட்டால் நான் எதுக்கு லாயக்கு? எண்ணிப் பார்க்கிறேன்.

பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணை எனக்குக்கட்டி வைத்தார்கள். அவள் பாட்டன் அவளுக்கு நிறைய சொத்து வைத்து விட்டுச் சென்றிருக்கிறார். நிறைய நகை வைத்திருக்கிறாள் அதற்காகவே ஒரு பெண் வேண்டும் என்று கவலைப்படுகிறாள். “எனக்குப் பின்னால் யார் இந்த நகைகளைப் போட்டுக் கொள்ளப் போகிறார்கள். ?” அதுவே அவளுக்குக் கவலை.

நான் சொல்வேன்,“ஏன் உனக்கு நிச்சயம் ஒரு மருமகள் வரப்போகிறாள். அவளுக்குப் போட்டு அழகு பார்க்கலாமே" என்று.

“எனக்கு என்று ஒரு பெண் வேண்டும்” என்று கூறுகிறாள். “ஒன்று கொடுக்க ஒன்று வாங்க” என்று அழகாகச் சொல்லுவாள், கொடுக்கல் வாங்கல் வாணிபத்தில் பார்த்திருக்கிறேன். அது அவள் வாழ்க்கைத் தத்துவமாக அமைந்திருக்கிறது.

“இரண்டுக்கு மேல் வேண்டாம்” என்ற விளம்பரம் அவள் கண்ணில் பட்டு இருக்கிறது. நான் சொல்லுவேன் 'ஒன்றுக்கு மேல் வேண்டாம்’. என் அப்பாவுக்கு நான் ஒரே பிள்ளை. அதனால்தான்.

“அதனால்தான் நீங்கள் செல்வமாக வளர்ந்து விட்டீர்கள், செல்வமாக வளர்க்கப் பட்டீர்கள்."

நான் படிக்கவில்லை என்பதை இப்படிக் குத்திக் காட்டுவாள்.

நான் படித்த இந்தக்கூட்டத்தைப் பார்க்கிறேன். அவர்கள் இன்று என்ன செய்கிறர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/50&oldid=1325683" இலிருந்து மீள்விக்கப்பட்டது