பக்கம்:காணிக்கை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 'இது எப்படி' என்ற டயலாக் ரஜனிகாந்த் அடிக்கடிப் பேசுவது ஒரு ஹிட் ஆய்விட்டது. அன்று ஒரு விசிறிகளின் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு மேடையில் பேசிப் பழக்கம் இல்லை என்று சொல்லிவிட்டு'இது எப்படி இருக்கிறது?" என்று கூறினர். ஒரே சிரிப்பு இது பதினறு வயதினிலே வரும் சுவையான பேச்சு, "நான் உன்னைக் காதலிக்கவில்லை. உன் பதினறு வயதுதான் என்னைக் கவர்ந்தது" என்கிருன் அந்த டாக்டர். இதுவும் பிரமாதமான டயலாக்கு. இதெல்லாம் கேட்கப் பார்க்கச் சுவை தருகிறது என்கிருள். அந்தச் சப்பாணி' பிரமாதமான படைப்பு என்கிருள். பரட்டையை அப்படியே விட்டு விட்டு இருக்கலாம். அவன் பெரிய வில்லன் என்று கூற முடியாது. சாதாரண சராசரி பேர்வழி. கதை "பார்முலா” ஒரு ரேப்’ ஒரு கொலை அவசியம் என்று பட்டது. ரொம்பவும் செயற்கையாகக் கதை முடிக்கப்பட்டது என்பது என் அபிப்பிராயம். அவள் அதை ஒப்புக் கொள்ளவில்லை. அப்படித்தான் முடியவேண்டும். கலியாணம் முக்கியம் இல்லை. கதைதான் முக்கியம் என்ருள். அவள் சொந்த வாழ்க்கையில் கலியானத்தை விரும்புகிருளா, கதையை விரும்புகிருளா என்று அறிய விரும்பினேன். உனக்கு எது பிடிக்கும்?' என்று கேட்டேன். "கதைதான் பிடிக்கும்" என்ருள். "கலியானம்?" "உங்களுக்கு?" என்று கேட்டாள். கா-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/54&oldid=786963" இலிருந்து மீள்விக்கப்பட்டது