பக்கம்:காணிக்கை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நான் எண்ணிப் பார்க்கிறேன். பதில் சொல்ல முடிய வில்லை. பத்துக்கு அது முக்கியமான நிகழ்ச்சி. அவள் வருஷத்தில் இரண்டு நாட்களை நினைவுபடுத்திக் கொள்கிருள். ஒன்று அவள் பிறந்த நாள். நிச்சயமாக அன்று மோர்க்குழம்பு வைத்து விடுகிருள். அதுதான் அவளுக்கு ரொம்பவும் பிடித்தது. மற்றென்று 'கலியான நாள் எப்படியும் ஒரு ஸ்வீட் செய்து விடுவாள். 'அம்மா இன்னிக்கு என்னம்மா?" "உங்க அப்பாவைக் கேள்" "அம்மாவை நான் கலியாணம் பண்ணிக் கொண்ட நாள்" என்று நான் விளக்கம் சொல்வேன். "சரியான பைத்தியம்பா நீ" என்று சொல்வான். அவனுக்கு இது ஒரு வழக்கமான பேச்சாக அமைந்து விட்டது. அவனுக்கு ஏதாவது புதுமையாகப் பட்டாலும், சரி இல்லை என்று பட்டாலும் உடனே சரியான பைத்தியம்பா நீ என்று சொல்லிவிடுவான். 1 ஏண்டா நீ கலியாணமே பண்ணிக்க மாட்டியா?" "ஒ பண்ணிப்பேன்" என்று துணிச்சலாகச் சொல்வான். யாரை?' "என் பெண்டாட்டியை" என்று சொல்வான். நானும் பத்துவும் சிரிப்போம். நாங்கள் சிரிப்பதற்கு அவன் ரொம்பவும் உதவி இருக்கிறன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/55&oldid=786964" இலிருந்து மீள்விக்கப்பட்டது