பக்கம்:காணிக்கை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 'இல்லை man friend, அவர்தான் அன்று என்னைக் காப்பாற்றினர். அன்று பஸ் ஸ்ட்ரைக் நடந்ததே. அன்று துச்சாதனன் துகில் நாடகம். அது முடிந்து வீடு திரும்பும் போது வன்முறையாளர்கள் வழி மறித்தார்கள். அன்று அவர் வராவிட்டால்." "என்னடி சினிமாக் கதை பேசறே' "உனக்கு சினிமாக் கதை என்ருல் அவ்வளவு கேவல மாகப் போய்விட்டது. அதைப் போல் நடக்காது என்று சொல்றியா?" 'இல்லை. அதைச் சாதாரணமாக அமைத்து விடுகிறர் கள். "அதைப் பார்த்துதான் அவர்கள் கற்றுக்கொள் கிருர்கள்." "அவர்களைப் பார்த்துச் சினிமா கற்றுக்கொள்கிறது." 'கடற்கரையில் நடக்கலாம்' "அதுக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது என்று நீ சொல்றே. அதுதான் மின்னல் வேக வேலை நிறுத்தம்'. "அந்தக் குக்கிராமத்திலே நடக்குமா? அங்கே அந்த ஊரார் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் களா?” "அதுதான் செயற்கை என்று சொல்லுகிறேன்" என்று அவள் முடித்தாள். "இது இயற்கை என்று ஒப்புக்கொள்கிருயா?" "கட்டாயம் நடக்கும். இது நகரம். எல்லாவற்றுக்கும் துணிந்தவர்கள்” என்று அவள் மேட் ஒப்புக்கொண் டாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/59&oldid=787047" இலிருந்து மீள்விக்கப்பட்டது