பக்கம்:காணிக்கை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



60


“காதல் உடலைப் பற்றியது. நட்பு உள்ளத்தைப் பற்றியது” என்று அவள் விளக்கம் தந்தாள்.

“அதுதான் நானும் நினைக்கிறேன். அந்த உடல் உறவு சே! அதை நினைத்துப் பார்க்கவே பிடிக்கவில்லை. அது எப்படித்தான் காதல் செய்கிறார்கள்.”

“இதெல்லாம் உனக்கும் எனக்கும் விளங்காது. அதற்குக் காலம் வரும்.”

இப்படி எல்லாம் என்னைப் பற்றி அவள் கண்ட கனவுக்குப்பின் அவர்கள் பேசி இருக்கிறார்கள். இதை அவள் அந்த கடற்கரைக் காற்றில் என்னிடம் சொல்லி இருக்கிறாள்.

அவள் என்னைப் பற்றிக் கனவு கண்டாள். அதை அவள் மேட்டிடம் சொன்னாள். பொறுமையாகக் கேட்டாள்.

நான் என் மேட்டிடம் நானாகச் சொல்லவில்லை; தூக்கத்தில் நானாக உளறிக் கொட்டிவிட்டேன்.

“மதுவைப் பற்றிய கனவா?”

இது அவள் கேட்ட கேள்வி. இவளை மது ஒழிப்புப் பிரச்சாரத் தலைவியாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மறுநாள் மூட்டை முடிச்சோடு புறப்பட்டு விட்டாள்.

“இனி ஒரு க்ஷணம் கூட குடித்தனம் பண்ண மாட்டேன்” என்று சொல்லிவிட்டாள்.

எனக்கு எங்க பெட்ரோல் பங்குத் தொழிலாளிகள் மிரட்டுவார்கள்.

அதாவது வேலை நிறுத்தம் செய்வதாகச் சொல்வார்கள். அவர்களுக்கும் பத்துவின் ஒத்துழையாமைக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/61&oldid=1455040" இலிருந்து மீள்விக்கப்பட்டது