பக்கம்:காணிக்கை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

“இல்லை நான் சொல்வதைக் கேள்,” எந்தக் குடும்பப் பெண்ணும் இதைத் தாங்கிக்கொள்ள மாட்டாள்.

“கனவிலே உளறக்கூடிய அளவு. உங்கள் உறவு”

“முற்றவில்லை. அரும்பி இருக்கிறது அது மலராக ஆவதற்கு எவ்வளவோ காலம் பிடிக்கும். பிறகு அது காயாகிக் கனியாவதற்குள்.”

“நான் பறித்துவிட்டேன். நீங்கள் நிம்மதியாகக் காதல் செய்யுங்கள். நான் வேண்டாம் என்று சொல்ல வில்லை. நான் என்ன ஒன்றும் ஆம்படையான் வேண்டுமென்று காத்துக் கிடக்கவில்லை” என்று தூக்கி வாரிப் பேசினாள்.

நான் எவ்வளவு அவசியமில்லாத பொருளாகிவிட்டேன் என்று நினைக்கும் பொழுது நான் மிகவும் தாக்கப்பட்டு விட்டேன்.

முரளிக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னப்பா அம்மாவுக்குப் பயித்தியமா” என்று கேட்டான்.

அவள் நடந்து கொள்வது அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னைக் கேட்கும் கேள்வியை அவளைப் பார்த்து அன்று கேட்டுவிட்டான்.

பெரியவர்களின் போக்கை அப்படி விமரிசிப்பது அவனுக்குப் பழக்கமாகி விட்டது.

“ஆமாண்டா எனக்குப் பயித்தியம். சின்னம்மா வரப் போகிறாள் அவள்தான் உனக்குச் சோறு போடுவாள்” என்று சொல்லிவிட்டு அவள் புறப்பட ஆரம்பித்தாள்.

“சின்னம்மாவா”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/62&oldid=1455043" இலிருந்து மீள்விக்கப்பட்டது