பக்கம்:காணிக்கை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

“ஓர் ஆடவனுக்குக் கனவு காணக் கூடவா உரிமை இல்லை” என்று கேட்டாள்.

அவளே கொஞ்ச நேரம் பொறுத்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். “Silly” என்று சொல்லி இருக்கக் கூடாது.

“அவர்களை மதிக்கிறேன்” என்றாள்.

எனக்குப் புரியவில்லை.

“அவர்களுக்கு உலகம் சிறியது. குடும்பம்தான் உலகம். அதற்கு மேல் அவர்களால் செல்லமுடியவில்லை. Sorry நான் தவறாகச் சொல்லி விட்டேன்” என்று வருந்தினாள்.

அவளை என் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பினேன். ஆசைகள் வேகமாகச் செயல்படுகின்றன என்பதை அன்றுதான் அறிந்தேன். ஆசைகளுக்கு ஆற்றல் மிகுதி என்பதை அறிய முடிந்தது.

அவள் சொன்னாள் “இல்லற தர்மம் என்று இருக்கிறது. அதன் படி நீங்கள் குற்றவாளிதான். அதாவது கட்டிய மனைவியைத் தவிர வேறு ஒருத்தியைக் கனவிலும் கருதக் கூடாது” என்று சொன்னாள்.

அவள் சொல்லுவது, திருக்குறள் தெளிவுரை போல் இருந்தது.

“சமூக தர்மம் என்ற ஒன்று இருக்கிறது அதன்படி நீங்கள் என்னிடம் நட்புக் கொள்ளலாம். அந்தத் தர்மம் இன்னும் இந்த நாட்டில் கால் கொள்ளவில்லை. அதைப் புரிந்து கொள்ளவில்லை. கொள்ளவும் மாட்டார்கள்.

அதற்குத் தடையாக இருப்பது ஆண் பெண் உறவு. அதற்கு இந்த நாட்டில் முக்கியத்துவம் கொடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/65&oldid=1455049" இலிருந்து மீள்விக்கப்பட்டது