பக்கம்:காணிக்கை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 விடுகிறர்கள். அது இல்லாமலும் ஒருவனும் ஒருத்தீயும் பழக முடியும் என்பதை இந்தச் சமூகம் உணரவில்லை. அதற்குக் காரணம் தெரியுமா? உங்களுக்குத் தெரியாது. நான் சொல்கிறேன். இந்த நாட்டுப் பழைய இலக்கியங்கள் 'ஒருவன் ஒருத்தி' என்று அறிந்ததே தவிர இந்த இரண்டு பேருக்கு மேல் அவர்கள் சமூக உணர்வு வளரவில்லை. எல்லாமே. இந்தக் குடும்பத்தைச் சுற்றித்தான் அமைக்கப்பட்டுள்ளது. சொத்து உரிமை என்பது ஒரு பயங்கரமான பூதம். அது தான் இந்தக் குடும்பங்களைக் காத்து வருகிறது. உங்களுக்குப் பின் ல்ை அந்தச் சொத்து முழுவதையும் உங்கள் மனைவி அடைய விரும்புகிருள். அவளுக்குப் பின் ல்ை உன் மகனுக்கு என்று நினைக்கிருள். நீங்கள் வேறு ஒரு பெண்ணை நினைத்தால் நீங்கள் அந்தச் சொத்தில் பணத்தில் பெரும்பங்கு அவளுக்குச் செலவு செய்து விடுவீர்கள் என்று நினைக்கிருள். இதுதான் உண்மை. நீங்கள் என்னை நினைப்பதால் அவர்களுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டுப் போய்விடாது. நீங்கள் அந்தக் குடும்பத்தின் முழு நேர உழைப்பாளி.இதுதான் உண்மை’ என்று கூறி விளக்கினுள். "உனக்கு எப்படி இது தெரியும்' என்று கேட்டேன் நீங்கள் சமுதாயச் சிந்தனை' என்ற நூலைப் படித்திருக்க வேண்டும். அதைப் போன்ற நூல்கள் பெருக வேண்டும். சமுதாயக் கண்னேட்டத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகில் எவ்வளவோ அடிமைத்தனம் இருக்கிறது. அவற்றுள் இந்தக் கணவன் மஃ. வி பந்தம் ரொம்பவும் அடிப்படையானது. அது கொஞ்சம் தளர்ந் தால்தான் சமுதாயச் சிந்தனைகள் வளரும் என்று கூறினுள். 'இதெல்லாம் உங்கள் படிப்பில் சொல்லித் தருகிறர் αξς π π?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/66&oldid=787101" இலிருந்து மீள்விக்கப்பட்டது