பக்கம்:காணிக்கை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது தான். நீங்கள் HI. குடும்பத் தலைவர். அதாவது நீங்கள் சமுதாய மனிதர் அல்ல. குடும்பத் தலைவர்.” அழகான சொற்கள். அவள் என்னை ச் சிரித்து விளையாடுவது போல இருந்தது. இப்பொழுது நான் அவளோடு அதிக நேரம் பேச முடியவில்லை. முரளி எனக்காகக் காத்துக் கிடந்தான். மனைவி வீட்டில் இருந்தபோது இருந்த உரிமையும் இப் பொழுது இல்லை என்பதை உணர்ந்தேன். 3 அவள் உலக சரித்திரம் படித்தவள்; நான் வீட்டுச் சரித்திரத்தையே படிக்கவில்லை. நான் படித்த சரித்திரம் என்ன? சொத்துக்கு ஒரு பிள்ளை. சுகத்துக்கு ஒரு பெண் . இப்படிக் கேட்ட தலைமுறையிலே வந்தவன். அவள் சொல்கிருள். ' சந்தோஷத்தைப் பிறர்க்குப் பங்கிட்டுத் தரவேண்டும். துக்கத்தை நாமே தாங்கிக் கொள்ள வேண்டும்" என்று சொல்கிருள்.என் துன்பத்தை நான் தானே தாங்கிக்கொள்ள வேண்டும். புயல் வீசியது; நாட்டிலே எவ்வளவு பெரிய கஷ்டம். தண்ணிர் போய் ஊரையும் ஏழைகளையும் அழிக்கிறது என்ருல் ரொம்ப அதிசயமாகத்தான் இருக்கிறது. நான் எதிர்பார்க்கவில்லை. அவள் ஊருக்குப் போனபோது இந்த விபத்து ஏற்பட்டது. அவளுக்கு ஒன்றும் இல்லை. சுகமாகத் தான் போய்ச் சேர்ந்திருக்கிருள். இல்லாவிட்டால் த்ந்தி வந்திருக்குமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/68&oldid=787105" இலிருந்து மீள்விக்கப்பட்டது