பக்கம்:காணிக்கை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முன்னெல்லாம் தந்தி என்ருல் யாராவது செத்துவிட் டால் தான் அடிப்பார்கள். இப்பொழுது கலியாணத் துக்கும் அடிக்கிருர்கள். ஏன் முன் கூட்டியே தபாலில் போடக்கூடாதா அது அவ்வளவு நல்லது அல்ல என்று நினைக்கிறர்கள். அதாவது அதிக செலவு செய்து தந்தி அடித்தால்தான் மதிப்பு; அதாவது யாரோ ஒரு பணக் காரன் முதன் முதலில் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறன். அவன் மறந்துவிட்டிருக்கிறன். திடீர் என்று நினைவு வந்திருக்கும் தந்தி அடித்திருப்பான். பணக்காரன் எந்தத் தவறைச் செய்தாலும் அதைப் பின்பற்றுவதுதானே இந்த நாட்டுப் பழக்கம். பணக்காரன் நிறைய செலவு செய்து கலியாணம் செய்தால் கலியானம் என் ருல் இப் படித்தான் இருக்க வேண்டும் என்று மற்றவர்களும் நினைக் கிருர்கள். அப்புறம் ஒரே காப்பி'. இது சம்பிரதாயம் என்று மாறிவிடுகிறது. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும். சும்ம யோசனை பண்ணிப் பார்க்கிறேன். இந்த 'பத்து போய்ச் சேர்ந்தேன்' என்று ஒரு தந்தி அடித்திருக்கக் கூடாதா! அப்புறம் அவள் என்னை மதித்து விட்டதாக ஆகிவிடும். "நான் எக்கேடு கெட்டாலும் உங்களுக்கு என்ன?" இப்படிச் சொல்லி இருக்கிருள். அதைப் போல நான் திருப்பிக் கேட்டால் அவள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வாள். இந்தக் கலியாணப் பந்தலிலே ஐயர் சொல்லிக் கொடுக்கிருர், "அக்கினி சாட்சியாக முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக" இவ்வளவு பேரும் நமக்கு சாட்சி நிற்கிருர்கள். 'எந்தக் காலத்திலும் மனைவியைக் கைவிடு வது இல்லை' என்று அந்த ஐயர் சத்தியம் வாங்கிக் கொள் கிருர். அவளிடம் இந்தச் சத்தியம் வாங்குவது இல்லை. அருந்ததியைக் காட்டுகிறர். அம்மி மிதிக்கிறர். என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/69&oldid=787109" இலிருந்து மீள்விக்கப்பட்டது