பக்கம்:காணிக்கை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 னென்னமோ சுற்றிச் சுற்றி ரவுண்டு அடித்துத் திருப்பு கிருர், 'புருஷன் கூட சண்டை போட்டுக் கொண்டு தாய் வீட்டுக்குப் போகாதே’ என்ற ஒரு புத்திமதி சொல்லக் கூடாதா, அவள் போகட்டும் நல்லத்தனமாகப் போகட்டுமே வரட்டுமே. நான வேண்டாம் என்று சொன்னேன். போகும் போது அவள் சாபம் கொடுத்து விட்டுப் போகிருள். " அவளையே கொண்டு வந்து வச்சிக்கோ குடித்தனம் பண்ணிக்கோ நானு வேண்டாம் என்று சொன்னேன்.” எவ்வளவு தாராளமான மனம். பெண்ணை வச்சிக் கிறதுக்கும் குடித்தனம் பண்றதுக்கும்தான பயன்படுத் தனும். வேறு எதற்கும் பெண் பயன்பட மாட்டாளா. மது அது மயக்கம் தரும். இல்லை என்று சொல்லவில்லை. நான் அருந்தில்ைதானே குற்றம். பார்த்தாலேயா குற்றம்: பழகினேன் விடமுடியவில்லை. பழக்கம் யாரையும் விடாது என்பது உண்மைதான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, இருக்கிறது. 'பத்து: இருக்கும் பொழுதுதான் என் மனம் மதுவின்மீது நாடியது. அவளைப் பார்க்க அங்கே அதுதான் கடற்கரை. இந்தக் கடற்கரையை ஏன் காதலர்கள் தேடுகிறர்கள். பரந்த மணல், உயர்ந்த வானம், சுற்று முற்றும் மனிதர்கள் ஆனல் அவர்கள் யாரோ தெரியாது; விழிகள் நம்மைப் பார்க்கின்றன; ஆனால் அந்த விழிகளில் எங்கள் உருவம் படிவது இல்லை இரண்டு பேர்’ என்றுதான் பேசுவார்கள். அந்தப் படகு அந்த இடத்தை விட்டு அசைவதே இல்லை.ஏன். அது தெரியவில்லை. நாங்கள் அங்கே சாய்ந்து கொண்டு பேசுவதற்குப் பயன்படுகின்றது. கா-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/70&oldid=787113" இலிருந்து மீள்விக்கப்பட்டது