பக்கம்:காணிக்கை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 'உடனே தன் செருப்பை மாற்றிக்கொள்வார்கள். உயரச் செருப்பு வாங்கி மாட்டிக்கொள்வார்கள்' என்ருள். அந்த வீட்டில் அவள் உயரமாக இருந்தாள். அவள் என்னை விடக் கொஞ்சம் உயரம் கம்மிதான். "ஏன் இங்கே வந்தாய்?" 'ஹாஸ்டலில் அனுமதி பெற்றே வந்தேன்' என்ருள். "அதைக் கேட்கவில்லை. நான் இங்கே தனியா" "இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் வந்தேன். உங்க முரளிக்கு ஒரு அம்மா தேவைப்படும் என்பதை உணர்ந்துதான் வந்தேன்." 'இப்படியும் ஒரு பெண்” 'எப்படியும் ஒரு பெண் உங்களுக்குத் தேவை." 'அப்படிச் சொல்ல முடியாது. அவன் அம்மாதான் வேண்டும்” என்கிறேன் . 'உங்களைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு ஏற்பட் டது” என்ருள். என் மனைவி இதுவரை எப்பொழுதும் இப்படிப் பேசியதே இல்லை. நான் தான் இப்படிப் பலமுறை சொல்லி இருக்கிறேன். அவளைப் பிரிந்து என்னுல் வாழ முடிவதில்லை. ரொம்பவும் பிரிந்திருந்தால் ஒரு மாதம்தான் பிரிந்திருப் பேன். அவள் இல்லாவிட்டால் அந்த வீடு ஒவ்வொரு அறையும் நன்ருகத் தெரியும். வெறும் வீடுதான் தெரியும். அவளிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன். 'என் உயிர் நீ உனக்காக என் உயிரையும் விடுவேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/74&oldid=787121" இலிருந்து மீள்விக்கப்பட்டது