பக்கம்:காணிக்கை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 "பகைவராகக் கொள்ளப் போகிறேன்." "அப்படியென் ருல்” "உங்களை விரும்பி உங்களோடு வாழத் துணிந்து விட்டேன்." 'இது பகையா?” 'ஆம் உங்கள் மனைவிக்குப் பகையாக மாறப் போகிறேன். அப்பொழுது நான் உங்களுக்குப் பகை தானே.” எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆசைகள் அலை மோதிக் கொண்டு வந்தன. அவள் அழகு என் கண்முன் நின்று என்னை அழைத்தது. அந்த வீடு அழகாகக் காட்சி அளித்தது. அவள் வயது இருபத்தியாறு: நான் பதினறு ஆய்விட்டேன். அதாவது இளமை எனக்கு எப்படித் திடீர் என்று வந்ததோ தெரியவில்லை. யார் ஒருவர் காதல் உணர்வுகளை வளர்க்கிருர்களோ அவர்கள் என்றும் இளமையாக இருப்பார்கள் என்பதை அப்பொழுது உணர்ந்தேன். முப்பத்தாறும் இளமைதான், ஆனுல் அதில் இளமை நினைவுகள் எழுவது இல்லை; பொறுப்பு என்ற சுமை கற்பனைகளை அழித்துவிடுகின்றன. பொறுப்பற்ற இளமைக்குச் சென்றேன். "அந்தச் சப்பாணியைப் பற்றி என்ன நினைக்கிருய்?" என்று கேட்டேன். "அவன்தான் சிறைக்குச் சென்று விட்டானே. அவள் தான் அவனைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிருளே’ என்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/79&oldid=787131" இலிருந்து மீள்விக்கப்பட்டது