பக்கம்:காணிக்கை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 "எனக்கு அது அழகிய உருவகமாக இருக்கிறது" என்றேன். - "எப்படி" "எவன் ஒருவன் தன் உழைப்பை நம்பி வாழாமல் பிறரை எதிரி பார்த்து வாழ்கிறேனே அவன்தான் சப்பாண்' என்றேன். 'யாரைக் குறிப்பிடுகிருய்?' என்று கேட்டாள். "என்னைப் பற்றித்தான்' 'நீங்கள் முதலாளியாயிற்றே' அதுதான் சொல்கிறேன். நான் என் உழைப்பை நம்பி வாழவில்லை. பிறர் உழைப்பை நம்பி வாழ்கிறேன். அதனுல் நான் ஒரு சப்பாணி" என்றேன். அவள் சிரித்தாள். "பதினறு வயதில் அவள் சிரிக்கிருள். அதைப் போல நீ சிரிக்கிருய்' என றேன். சிரிப்பு எல்லார்க்கும் சொந்தம் அவளுக்குத்தான் சொந்தம் என்று கூற முடியாது என்ருள். நேரே அவள் முரளியிடம் சென்ருள். அவனே எடுத்து அனைத்து முத்தம் இட்டாள். அது எனக்கு வியப்பாக இருந்தது. என்னைக் காதலிப்பதாகச் சொல்லி முரளிக்கு அவள் முத்தம் கொடுத்தது எனக்குப் புதுமையாக இருந்தது. "இவங்கதான் சின்னம்மாவா" என்று கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/80&oldid=787135" இலிருந்து மீள்விக்கப்பட்டது