பக்கம்:காணிக்கை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 'இவள் பின்னம்மா அதாவது அம்மாவுக்குப் பின் வந்த அம்மா’ என்றேன். "அழகாக இருக்கிருர்களே” அவன் அவளுக்குத் தந்த நற்சான்று இது. 'மது! நீ அழகாக இருக்கிருய்' 'உங்கள் பாராட்டு' "ఖమ& prá 65 మఖుడి" 'அவன் சொல்லட்டும். அவனுக்கு என்னைப் பிடித்து இருக்கிறது என்று அர்த்தம்' "நான்' 'உங்களிடம் அதை எதிர்பார்க்கவில்லை” 'அவள் எதைக் குறிப்பிட்டாள் என்பதை என் ல்ை புரிந்து கொள்ள முடியவில்லை.” அவள் அவனுக்குச் சோறு போட்டாள். எனக்கும் அவளே போட்டாள். வேலைக்காரி சமைத்து வைத்து விட்டுச் சென் ருள் என்ருலும் யாராவது போட்டுப் பழகி விட்ட பிறகு எனக்கு அவள் தேவைப்பட்டாள். ஆமாம். எனக்கு எவ்வளவு துணிவு. அவள் நினைவே கூடாது எ ைறு என் இல்லாள்! அவள் இப்பொழுது இல்லை. அதனுல் அவளை இல்லாள் என்று குறிப்பிட்டேன் , அப்படி இருக்க மதுவே வீட்டில் வந்து புகுந்துவிட்டது. நான் எப்படி அவளைப்போ’ என்று சொல்வது. சொல்வது நாகரீகமாகப் படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/81&oldid=787137" இலிருந்து மீள்விக்கப்பட்டது