பக்கம்:காணிக்கை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 "ஏன் நான் ஒரு வீடு அமைத்துக் கொள்ள முடியாது என்று நினைக்கிறீர்களா?" "நீ தான் இந்தக் குடும்ப நியதிக்குக் கட்டுப்பட மாட்டாயே". . "அப்படித்தான் வெறுந்தாள் சரசுவதி நினைத்தாள். அப்புறம் அவள் முழுக்குடும்பப் பெண்ணுக மாறிவிட வில்லையா? - - "அப்படியானல் நீ" "எனக்குத் தெரியாது" என்று பதில் சொல்லித் தப்பித்துக் கொண்டாள். இந்த ஒரு வினவுக்குத்தான் அவள் பதில் சொல்ல வில்லை. மற்றைய எல்லா வினக்களுக்கும் அவள் பதில் சொல்லி இருக்கிருள். "குடும்பம் என்பது வருகிற ஆளைப் பொறுத்து இருக்கிறது. இன்று இளைஞர்களுக்குக் குடும்பம் நடத்துவது என்பதே தெரிவதில்லை" என்று சொன்ள்ை. 'நான்?" "உங்களைப் பற்றிச் சொல்லவில்லை. நீங்கள் எங்கே குடும்பம் நடத்துகிறீர்கள். அவர்கள் தானே நடத்து கிருர்கள்." நான் ஒரு சப்பாணி என்பதை அவள் குத்திக் காட்டிள்ை. "நீ எனக்கு நண்பாக இருக்க முடியும். துணைவியாக இருக்க முடியாது' 'துணை வியாக இருக்க முடியும் மனைவியாக இருக்க முடியாது' என்று திருத்தினள். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நம் சினிமா நடிகைகள் பழைய நடிகைகள் இருக்கின்ற இடம் தெரியாமல் மறைந்து விட்டார்கள். ஈ.வி. சரோஜா நடிக்காத தமிழ்ப்படமே இல்லை. அவர்கள் இன்று எங்கே என்ன என்று கேள்விகளுக்குப் பதில் கிடைப்பது இல்லை. சில சமயம் கஷ்டப்பட்டு அவர்கள் பெயரை நினைவுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/85&oldid=787212" இலிருந்து மீள்விக்கப்பட்டது