பக்கம்:காணிக்கை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 கொண்டு வர வேண்டியிருக்கிறது. நான் அவள் பெயரை மறந்து விட்டேன். மதுதான் நினைவுப் படுத்தினுள். "ஒரு நடிகை மணமானவுடன் ரசிகர்களின் ரசனை மாறி விடுகிறது" என்று நான் கூறினேன். 'இல்லை. பத்திரிகைகள் அந்த மாற்றத்துக்கு அதிக விளம்பரம் தருகின்றன. அவர்கள் சினிமாப் பார்வையில் கற்பு கெட்டு விடுகிருர்கள். அதாவது அவள் குடும்பப் பெண்ணுக மாறிவிடுகிருள். அது இந்தக் கோவலர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் குடும்பப் பெண் என்ற முத்திரை குத்தப்படுகிருள். அதற்குப் பிறகு அவளால் நடிக்கவும் முடிவதில்லை. தன் கணவனுக்குப் படிய விரும்புகிருள். அவன் போக்குக்கு ஏற்ப மாறி விடுகிருள். பிறகு நடிப்பு நடிப்பாக நின்று விடுகிறது. அதில் உயிரோட்டம் இருப்பது இல்லை" என்று கூறினுள். "நல்லதுதானே அவர்களே இடம் பிடித்துக் கொண்டால் நாம் புதிய நடிகைகளை எப்படிக் காண முடியும். இப்பொழுது நடிகை என்பதற்கே இலக்கணம் மாறிவிட்டது; மாறிவிடுகிறது. இயல்பாகக் குடும்பப் பெண்களைச் சித்திரிக்கும் முகம் சுஜாதாவிடம் இருப்பதா கப் பேசிக் கொள்கிறர்கள். நடிகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நிலைமை மாறிவிட்டது. இயல்பான முக பாவங்கள் நடிப்புக்கு உயர்வு தருகின்றன என்று நினைக்க வேண்டிஇருக்கிறது. அவள் ஏன் பதினறு வயதில் நடிக்க s5eb%t. 9jsush Over age'. ஆமாம் பதினறு வயது இப்பொழுது காதலிக்கும் பருவமா காலம் மாறி விட்டது. இருபதில்தான் காதலே ஆரம்ப மாகிறது. இருபத்தியாறில் தான் அது அரும்புகிறது. முப்பதில் தான் மலர்ச்சி பெறுகிறது. என்னமோ இப்படி எண்ணத் தோன்றுகிறது. பொருளாதாரப் பிரச்சனைகள் அல்வளவு எழுகின்றன. &n–6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/86&oldid=787215" இலிருந்து மீள்விக்கப்பட்டது