பக்கம்:காணிக்கை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 எனவே பொய்யாகவும் பாரட்டுவது உண்டுஎன்பதை நானே தெரிந்து கொண்டேன். யாரிடமாவது ஏதாவது ஆகவேண்டும் என்ருல் பொய் பாராட்டுதல் என்பது இயல்பாக அமைந்து விடுகிறது. "எதற்கு?" இந்தக் கேள்வி நான் கேட்கவில்லை. அவள் கேட்டாள். "என் மீது அன்பு செலுத்துவதற்கு" "யார் மீதாவது அன்பு செலுத்த வேண்டும்.இது இயற் கையின் சட்ட ம், இப்பொழுது நீங்கள் கிடைத்திருக்கிறீர் கள்" என்ருள். 'அப்படியானுல் அன்பு நிலையற்றதா?” "அன்பு நிலையானது; ஆள்தான் நிலையற்றது' என்று விளக்கம் தந்தாள். "நிலைத்த அன்பு என்பது உலகத்தில் காணவே முடியாதா?” ஞானிகளைப் போய்க்கேள்" என்று சிரித்துக் கொண்டே சொன்னுள். 'நீங்கள் இப்பொழுது தனித்து விடப்பட்டிருக்கிறீர். உங்கள் தனிமை போக வேண்டும்; அதற்கு ஒரு பெண் அவசியம் ' 'முரளிக்கு ஒரு தாய் வேண்டும்' "இரண்டுக்கும் நான் பயன் படமுடியாது என்பதை இங்கே வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன்." 'மனைவி ஆவதற்கு ஒருத்தி தன்னை இழக்கவேண்டும். தன்னை இழக்காதவரை அவள் மனைவியாக முடியாது” என்று மேலும் விளக்கம் தந்தாள். . "அது தெய்வீக உறவு; அதைத்தான் இல்லறம் என்று பாராட்டினர்கள். இந்த உலகத்தில் புற நிகழ்ச்சிகள் ஒரு வரை மிகவும் பாதிப்பது இல்லை. அவை மொத்தமாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/95&oldid=787252" இலிருந்து மீள்விக்கப்பட்டது