பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

9 8

'அட, சாமியோ, பேணுக்குச்சியை எடுத்து ஒரு வரி கிறுக்கி, கட்டிலே சேர்க்கிறதுக்கு உனக்கு அவகாசம் வேணுமோ? அந்தக் காகிதத்திலே அப்படி என்ன இருக்குதாம்?”

தந்தையின் நமட்டுச் சிரிப்பைக் கண்டவுடன் தனயனின் தலே தாழ்ந்தது.

'அந்தத் துப்பு உங்களுக்கா தெரியாது? முழுப் பூசணியைச் சோற்றிலே மறைக்கப் பார்க்கிறீங் களே, அப்பா?’’

'ஆத்தாடி மாரியம்மா! நல்லாச் சோதனை பண்ணிக்க: நான் சோறும் வச்சில்லை; பூசணிக் காயும் என் கையிலே கிடையாது, மகனே!’ என்று கைகளை அகல விரித்தார் பெரியவர். தீராத விளையாட்டுப் பிள்ளை மாதிரியான நடிப்பு, ஊம், இந்தக் காலத்து விடலங்களோட மனசை யாராலே படிச்சுக்க வாய்க்கும்? அதிலேயும், நீ கோணல் எழுத்துப் படிச்சவன். அத்தோட, நீ அசலூரிலே போய்ப் படிச்ச தங்கமாச்சே, தம்பி?’ என்று முடித்தார் அவர். வேர்வையை வருடி விட்டது. வேப்பங்காற்று.

உலகமே தெரியாத அப்பாவி மாதிரி நடித்துக் காட்டும் அப்பா எவ்வளவு தந்திரமான விநயத் தோடு வாழைப் பழத்திலே ஊசியை ஏற்றுகிருர்1"நான் உங்க மகன்; சிதம்பரம் சீமான் வீட்டுச் செல்லப்பெண் தமிழரசிக்குக் கூடிய சீக்கிரம் நான் பதில் எழுதி, அதை உங்க பார்வைக்கு வச்சிட்டு, அப்புறம்தான் நான் தபாலிலே சேர்ப்பேனுங்க.