பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

109

பண்ணுவோம். அப்புறம், அக்கம் பக்கங்களிலேயும் வெளியூர்களிலேயும் ரூபாய் நிதி திரட்டலாம். ஆக, இந்த நல்ல காரியங்களுக்கு நல்லவங்க சகலத் தனே பேரும் தட்டாமல் உதவி செய்வாங்க,' என்று விவரித்தார். பிறகு ஆதிமூலத் தேவரின் பக்கம் திரும்பி, 'பெரியவுகளே, நீங்கதான் வயசுக்கு மூத்தவங்க, உங்களோட ஆகி வந்த தங்கக் கையினலே ஒரு தொகையை பிள்ளையார் கழியாய்ப் போடுங்க,” என்று தயவுடன் விண்ணப் பித்தார்.

“உங்க விருப்பம் அதுவானல், அப்படியே செய்யக் காத்திருக்கேன்,' என்று கூறி, பூரிப்புடன் நோட்டை எடுத்தார் பெரியவர். தம் மகனைப் பார்த்தார். வீரமணியின் நிறைவான மனச் சிரிப்பில் திருப்தி கொண்டார். சில கணங்களே யோசனைக்காகச் செலவழித்தார். கடைசியில் நோட்டின் த லப்பிலிருந்த தம் பெயருக்கு நேராகத் தொகையை எழுதினர்.

ஊராட்சி மன்றத்தின் தலைவர், 'மூத்தவுக "ஆவன்ன தீன ஆயிரம் ரூபாய் எழுதியிருக் காங்க,' என்று மகிழ்வுப் பெருக்குடன் அஞ்சல் செய்தார்.

"நான் ஐயாயிரம் ரூபாய் தாரேன், பிரசி டெண்ட் ஐயா!' தேள் கொடுக்கு மீசை மீது கை போட்டுக் கருவத்தோடு சொன்னுர் ராமையாத் தேவர்.

அவரவர்கள் தொகை குறித்தார்கள்.