பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

* } 6

ஊம்; வேதாளம் மறு வாட்டியும் எங்கிட்டு முருங்கை மரத்திலே ஏறிக்கிட்டிச்சோ அப்படின்னு ரோசிச்சேன், ஊம்; சொல்லு: நான் ஒரே ஞாபகத் திலே தான் குந்திக்கிட்டிருக்கேன், நட்டமே நிற்காமல், நீயும் குந்திக்கிடுவேன்!'

வீரமணியின் நெஞ்சிலும் நினைவிலும் சற்று முன்னம் அன்னக்கொடி விளையாடிய மர்மம் பெரிய வருக்கு எங்ங்ணம் தெரிந்ததாம்?

செம்மறி மந்தை மேய்ச்சல்பாடு முடிந்து, பட்டியில் தஞ்சம் அடையத் தயாராகி விட்டது.

அப்பா, மகனே ஊடுருவ, மகன் அப்பாவைத் துழாவ, இதுதான் நல்ல சமயமென்று கணங்கள் சில பேய்க்கணங்களாகி நழுவுகின்றன.

"அப்பா, நாம இப்ப இருக்கிறது வேதாள உலகம் இல்லேங்க-தமிழ் உலகம்! தமிழர் உலகம்! தமிழருக்காக வேண்டி ஆண்டுக்கிட்டு இருக்கிற ஜனநாயக உலகம் இது. ஆகச்சே, இங்கே வேதாளத் துக்கோ, அல்லாட்டி, பட்டிக்கோ, இல்லாட்டி, விக்கிரமாதித்த மகாராசருக்கோ அலுவல் கிடை யாது. இது மட்டுமில்லே. நம்ப வீட்டு முருங்கை மரத்திலே அசல் வேதாளமே நாலுகால் பாய்ச் சலிலே ஒடியாந்து ரெண்டு தரம் இல்லே, இருபதா யிரம் தரம் வேணுமானுலும் ஏறிச் சோதிச்சுக் கிடட்டும். நம்ப குடும்பம் மாதிரியே நம்ப முருங்கைப் போத்தும் எதையும் தாங்கவும் தாங்குமுங்க! அத் தோட, எதையும் சமாளிக்கவும் சாமளிக்கு மாக்கும்! ...'