பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

及罗航

சொர்க்கவாசல், மணிக் கதவத்தாழ் திறந்து கொண்டது.

தரிசனம் தந்தவள் பராசக்தியா? அல்லது, அன்னக்கொடியேதானு?

உயிருக்கு உயிரளித்து, உணர்வுக்கு உணர்வாகி, உள்ளத்துக்கு உள்ளம் ஈந்து, அழகே அன்பாகவும் பாசமே நேசமாகவும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து, மண் தொட்டு விண் காட்டி, விண்தொட்டு மண் காட்டி, மகிழ்ந்தும் மகிழ வைத்தும், நெஞ்சுக்கு நீதி யாக-சத்தியத்துக்குத் தருமமாகப் பொலிந்தும் பொலிவூட்டியும் விளங்கவல்ல சக்தி அன்னக்கொடி ஒருத்திக்கே சொந்தம். அழகின் உச்சியல்லவா அவள்?

ஏலேலோ!...ஐலேசா!

அந்தக் குறிப்பில் அவனுடைய உயிரோவியம் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தது. அவனும் உயிரோ வியமாகி ஆனந்தமாகக் கண்ணிர்க் காணிக்கை வைத்தான். அன்னம்! அம்மான் மகளே அன்னக் கொடி!' அவன் எதையும் தாங்குவான், எதையும் சமாளிப்பான்! எதிர் நீச்சல் பழகியவன்; எதிர் வெய்யில் அவனுக்குக் கால் தூசு!

அவன் வீரமணி!- அன்னக் கொடியின்

வீரமணி! - -

கண்ணிர் மாலை மணக்காதா?

. உணர்வுகள் மனம் அறிந்து, மணம் உணர்ந்து

விழிப்புப் பெற்றிருக்க வேண்டும்.