பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

126

குறிச்சியில் சாய்ந்திருந்தவன் த லே ைய நிமிர்த்திக் கொண்டு உட்கார்ந்தான். விடிந்து விட்டதா? -அவன் பார்வை ஒட்டமாக ஒடியது: ஒடி நின்றது: நின்று சுட்டியது. சுட்டின இடத்தில், எழுதிக் கசக்கி வீசியெறியப் பட்டிருந்த காகிதக் குப்பை-கூளங்களுக்கு மத்தியில், ரங்கூன் கமலங் களுக்கு மையத்தில் வைரமாக அந்தக் கடிதம் விளங்கியது; எட்டி எடுத்தான் வீரமணி. நெஞ்சம் விம்மிற்று. கடிதத்தின் நெஞ்சில் இரண்டு சொட்டு முத்துக்கள் சிதறின. o • ‘.

நாட்குறிப்பில் கடிதமும் முடங்கியது. பொங்கி வந்தது பெரு நிலவு. நட்ட நடுவிலே, நிலவின் நிழலானன் வீரமணி. நினைவின் நிலவானன் அவன். -

வயல் வரப்புப் பக்கம் ஒரு நடை போயிட்டு ஒடியாந்திட்றேன்: அப்பத்தான் நடப்புப் புரிய ஏலும். விடிஞ்சா ஆடி. அதனலே, கால் மாடு தலை மாடாய்ச் சிதறிக் கிடக்கக் கூடிய நம்ப நிலபலன் சாடாவிலேயும் ஒவ்வொரு வண்டி குப்பைச் செத்தை அடிக்கச் சொல்லியிருந்தேன், நாச்சிக் கிட்டே. ஆடிப்பட்டம் ஊர் நாட்டிலே அமளி து மளிப்படுது. போன காலோடே திரும்பிடுவேன், தம்பி, என்று சொல்லிச் சென்ற தேவர், சொன்ன சொல் பிரகாரம் போன காலுடனேயே திரும்பி விட்டார். 'தம்பி, ஏப்பா இருட்டிலேயே குந்திக்கிட்டிருக்கிறே?" என்று கேட்டபடி, தம் மைந்தனை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து நிறுத் தினர். குறிச்சியில் உட்கார்ந்திருந்த அவர் திடுக்