பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

'ஐயா, இப்பத்தான் சோணிப் பயல் சொல் முன், ஒங்களுக்கு மறு திருப்பும் நெஞ்சடைப்பு வந்திடுச்சாமுங்களே? தீரத் தெளிய, கைக்கு ஒசந்த வைத்தியம் பண்ணிக்கிட்டால் தானுங்க தேவலாம். இனிமே ஒங்களுக்கு கைக்குக் கோலாட்டம் சின்னவர் கை வாகனமாய் இருந்திடுவாங்களே! அப்பாலே, நீங்க பாட்டுக்கு ஆத்தா மூத் தவளைச் சேவிச்சிட்டு, அக்கடான்னு ஒட்டுத் திண்ணையிலே ஒட்டிக் குந்தி, கார்வார் பண்ணி ராசாங்கம் நடத்த வேண்டியது தானுங்களே? பெத்து வளர்த்தவங்க பேச்சைத் துச்சமாய் மதிச்சு, எடுத்தெறிஞ்சு பேசி, தன்னடைச்ச மூப்பிலே தலைகெட்ட தனமாய்த் திரிபுதுங்களே நாலு முனு தறுதலேங்க, அ. துகளாட் ...மா இருக்கும் ந | ம சின்ன ஐயா? சின்னவருக்கு ஒங்க வாக்குத்தான் வேத வாக்கு: நீங்க கிழிக்கிற கோடுதான் அவுகளுக்கு லட்சுமணன் கோடு ! நீங்க தான் எங்களுக்கு ஆலமரம். ஒங்க நிழலிலே ஒண்டி உழைச்சி, உங்க உப்பை நாங்க நாளெல்லாம் நன்னி யோட தின்கிறதுக்கு உண்டான பொசிப்பை நீங்க தான் எங்களுக்குப் பெரிய மனசு பண்ணி வாரிக் கொடுக்கோணுமுங்க, பெரியவுகளே!'

வண்டிக்கார நாச்சியின் ஏழைமைக் கண்ணிர் நிற்கவில்லை.

வீரமணியின் கண்கள் மட்டுமல்ல; பெரியவரின் கண்களும் தான் தளும்புகின்றன.

நிலா முற்றம், அந்தரங்க ஆலோசனை மண்டப மாக மாறியிருந்தது.