பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

# 52

சொந்தம் கொண்டாடிக்கிட்டுக் கங்காணியாரைத் தேடிச் சிலட்டுர்ப் பக்கம் பறிஞ்சிருக்க வேணும் அப்பன் காரர்! ...ம்...ம்!...தப்புக் கணக்குப் போடவே மாட்டாராமே அப்பன்? வீரமணி மலைப் புத்தட்டி நின்று விட்டான். ஏதோவொரு சுவடு அவனுடைய உள்மனத்தின் ஏதோவொரு முடுக்கில் சுவடு பதித்திருந்த இரகசியம் அவன் வரை "சிதம்பர இரகசியம் அல்லதான்!

செம்மறிக் கிடாரி காட்டுக் கத்தலாகக்

கத்தியது; விரகதாபம் வாய் பேசியிருக்கலாம்.

வீரமணி எருக் குப்பையை ஒழுங்குபடுத்தி அள்ளிக் கொட்டி, நாலு வண்டிகளை வயல்வெளிக்கு வழியனுப்பி வைப்பதற்கும் சேக்காளி மாணிக்கம் வந்து நிற்பதற்கும் கணக்காக அமைந்தது.

நெற்றிவேர்வை சொட்டச் சொட்ட வீரமணி வரவேற்ருன். முட்டின்றி வழிந்த மகமாயி ஊருணித் தண்ணிர் முட்டியைச் சல் லாபமாகச் சாய்த்து உடம்பைச் சுத்தப்படுத்தினன். பெற்ற தாயின் உடல் நலன் பாதிக்கப்பட்டதால், சொல் படி நேற்று அந்திக்கு வர இயலவில்லை என்பதாகத் தோழன் சொன்ன தகவலைக் காதில் வாங்கிக்கொண் டான். சிநேகிதனின் அன்னை நலம் தேறிய தாக்கல் அமைதி காட்டியது. ஆனால், அதே சமயத்தில் அவன் இதயம் அமைதியைப் பறி கொடுக்கவும் நேரிட்டது. ஆத்தா!...வீட்டின் வெளிப்புறத்தே பளிச்சிட்ட கிளிப் பச்சை வண்ணப் பூச்சைப்