பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

1 5 6

எங்க அம்மான். அந்த ஆள் எங்க பெரியவரை அநியாயமாய்ச் சீண்டுருவம் பண்ணப் போக, இப்போ கதையும் காரணமும் எப்படி எப்படியோ திரும்பிக்கிட்டு இருக்குது. இந்தக் கதை கடைசிலே எங்கே போய் எப்படி முடியப் போகுதோ?தெரியவே இல்லே!' வீரமணியிடமிருந்து பெரு மூச்சு வெளியேறியது.

என்ன அண்ணே அப்படிச் சொல்லுறிங்க? எல்லாக் கதையும், நீங்க உங்க அம்மான் மகள் அன்னக்கொடியைக் கைப்பிடிச்சடியும் சுபமாய் முடிஞ்சிடாதுங்களா?” -

வீரமணிக்கு வெய்துயிர்ப்பை மீண்டும் வெளி யேற்ற மட்டுமே அப்போதைக்கு முடிந்தது. அப்பாவின் எதிர்பாரத தீர்ப்பை, அல்லது முடிவை, அல்லது திட்டத்தை மாணிக்கம் எவ்விதம் அறி வான்?-பாவம்! -

பாவமாவது; புண்ணியமாவது!...

பாவ புண்ணியத்தின் ஐந்தொகையைச் சோதிக்க இது நேரமல்ல.

ஏன், தெரியுமா?

திருமிகு ராமையாத் தேவரின் வீடு அதோ, வந்து விட்டது!-ஜாக்கிரதை...!

- வீடு என்ருல், ஒரு வீடு என்பது கணக்கு. வீடல்ல; வீடுகள். இரண்டு வீடுகள். ஒன்று, பழைய