பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

雇57

வீடு. நாட்டோடு வேயப்பட்டது. நில்லாய் நெடுஞ் சுவரே என்ற கவியின் ஆணையைச் சிரமேற் தாங்கிக் கொண்டிருக்கும் சுவர்கள். பழைய வீட்டுக்கு எதிரும் புதிருமாக இருப்பது புது மன. இரண்டடுக்கு தளப் பூச்சுத்தான் சொட்டை. ஆவணிக்குப் புதுமனை புகு விழாவாம்! துப்பு ஒன்று: கடைகால் படு கெட்டி. ஆகவே, செவ்வாய் மண்டலத்தைத் தாவிப் பிடிக்கும் அளவிற்குக்கூட அடுக்குகளின் எண்ணிக்கை அபிவிருத்தி அடையலா மாம்!-சிங்கப்பூர்த் தேவரின் வாக்கை மாற்று உரைத்துப் பார்க்க யாரால் முடியுமாம்?

தேள் கொடுக்கு மீசைப் பேர்வழியான ராமையாத் தேவர் முச்சந்தியில் நின்ருர்,

அதைப் பற்றி வீரமணிக்கு என்ன கவலை? அவனுடைய அப்பாவை முச்சந்தியில் சந்தி சிரிக்க வைத்து விடுவதாகச் சவால் விட்டவராயிற்றே இந்த அம்மான்காரர்? அவன் பற்களைக் கடித்தான். கண்களைத் திசை திருப்ப முனைந்தான் அவன். உள்ளம் களியாட்டம் போட ஆரம்பித்து விட்டது; ஆத்மாவின் ராகமெனப் பண்பாடும் - பண்பாடு பாடும் அந்த அமுதகீதப் புன்னகையைத் தரிசிக்க வேண்டாமா? தேடினன்; தேடிக் கொண்டிருந் தான்!... அற்புதம் அற்புதம்! அதோ, பொற்பின் செல்வியாம் அன்னக்கொடி புனிதச் சாதி மல்லிப் பூவாகப் புன்னகை செய்கின்ருள்!...உயிரின் உயிராகி, உயிருக்கு உயிராகி மலர்ந்த அந்தப் புன்னகைக்கு ஈடாக, குறுணி-பதக்கு என்று