பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

16.1

உரமிட்டு, நோய் தடுத்து, களை பிடுங்கி, கண் ணுக்குக் கண்ணுகக் கண்காணித்தால், மண்ணில் நெல்மணிகள் மட்டுல்லாமல், பொன்மணிகளும் நாடிக்கூடிக் கொழிக்கும்.

வேளாண்மை விஞ்ஞானத்தின் உயிராதார மான அடிப்படை விதி இது.

இதே விதி, இந்த மனத்திற்கும் விதித்திருக்க வேண்டும். -

மனத்தின் மனிதத் தன்மையை-மனிதாபி மானத்தைப் பண்படுத்தி, அன்பு எனும் விதை துரவி, பிறவிக்கடன் கொண்ட இரக்கம், கருணை, தயை-தாட்சண்யம், ஒழுக்கம், தொண்டு, பக்தி, நன்றியவு, பொறுமை, ஈகை, நேர்மை போன்ற மனிதப் பண்பின் உணர்வுகளை உரமாக்கி, சத்தி: யத்தையும் தருமத்தையும் நீர் பாய்ச்சி, தீவினை, சூது, துரோகம், களவு, பொய்ம்மை, கோபம், கயமை போன்ற வாழ்வழிக்கும் மிருகத்தனமான நோய்களைத் தடுத்தும் களைபிடுங்கியும் மனத்தை, மானத்தோடும் மனச்சாட்சியோடும் தமிழ் அறம் பேணிக் கட்டிக் காக்கும்போது, மனம் புடமிட்ட சொக்கத் தங்கமாக ஒளிகட்டுகிறது, ஒளிகாட்டு கிறது:

மெய்.

சோதனைகள் இல்லையேல், மண் ணு க் கு. வாழ்க்கை இல்லை: மனத்துக்கும் வாழ்வு கிடை. யாது.