பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

i ö 4

வேடிக்கை தான்! பிறந்த மனையே சோதனைக் கூட மாக உருமாறத் தொடங்கி விட்ட விசித்திரம் இப் போது தான் அவனது நெஞ்சிலும் நினைவிலும் மீண்டும் பொறிதட்டத் தொடங்கியது போலும்!

அப்பா விடுகதை போட்டாரா? இல்லை.

அப்பா தான் சிலட்டுர்ச் சம்பந்தத்தைப் பற்றிய தம்முடைய திட்டத்தை வெட்ட வெளிச்ச மாகச் சொல்லி விட்டாரே! ஆனால், அன்றைக்குத் தஞ்சாவூரிலே நீதிபதி, அம்மானுக்குச் சாதகமாகத் தீர்ப்பைப் படித்து விட்டு அதே சூட்டோடு ஆசனத் ைதவிட்டு எழுந்து சென்ற மாதரி, அப்பாவும் தம் முடிவைத் தெரிவித்த சூடு ஆறுவதற்குள் எழும்பிப் போய்விட்டார். போன தோடு நிற்க வில்லே, புதிர்ச் சிரிப்பை விடுகதையாக வீசிச் சென்ற விநயம் தான் பொருள் பிடிபடாத கவியாகத் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது! -

அப்பாவுக்குப் பிள்ளையான வீரமணி மட்டும் சோடை போய் விடுவான, என்ன? பெரியவர் வெளிப்படுத்திய புதிர்ச் சிரிப்புக்குச் சவால் விடுகிற மாதிரி, அவனும்தான் சிரிப்பை விடுகதையாக்கி விட்டான்! பின்னே என்னவாம்?-எட்டுக்கண் விட் டெரிய, கொடிகட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் சிலட்டுர்ப் பெருந்தனக்காரரான பெரிய கறுப்பத் தேவரின் செல்வப் புதல்வியான பவளக்கொடியை வீரமணிக்கு நிச்சயம் செய்திருக்கும் முடிவை அதிகார பூர்வமாக அம்பலப்படுத்திய பெரியவர், தம் மைந்தன் வீரமணியின் முடிவைப்பற்றியும்