பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

169

அப்போது:

வெளியே சத்தம் கேட்டது.

டோய் பயலே!...வெரசா ஒடியாலே! என்று கட்டளையிட்டார் ஆதிமூலத் தேவர்.

வீரமணிதான் ஒடவேண்டியவன் ஆளுன்.

எருமை வாகனமும் பாசக் கயிறுமாக வேடம் கட்டும் தர்மப் பிரபு மாதிரி, வெள்ளைக் காளையும் சீன வெடிச் சிரிப்புமாகக் காட்சியளித்துக் கொண் டிருந்தார் நாட்டாண்மைத் தேவர்.

தேவர் திருமகனுக்கு இனம் விளங்கியது.

அது அம்மான் வீட்டு வெள்ளைக்கானே; ரேக்ளாக் காளை!

வீரமணி விநயமாக நகைத்த வண்ணம் அப்பாவை ஏறிட்டு நோக்கியபின், அதே பார்வை பில் அம்மான் ராமையாத் தேவரின் அருமை மிக்க வெள்ளைக் காளையையும் அளந்தான். வெள்ளே யென்ருல், அந்த நிறத்திற்கென்று ஒரு புனிதம் இருக்கும்; அழகு இருக்கும். ஆனல், இந்த வெள்ளையோ திருடனுக்குத் தேள் கொட்டின பாவனையில் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந் தது. வைக்கோல் சிதறல்கள் அதன் கொம்புகளிலே சிதறியதோடு சரி. அப்பா, விடுங்க கயித்தை, வெள்ளையை மடக்கிப்போட்டு நான் கட்டிக்கிடு றேன் வாசல் பந்தல்காலிலே!...உழைச்சுக் கொண் டாந்து போட்டிருக்கிற நம்மோட வைக்கலேத் திருடித் தின்னுட்டு ஒடுறதுக்கு கள்ளத் தனமாய்