பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

I 71

என்ருன் வீரமணி. அவன் நெஞ்சில் சிலுவைக் குறி பளிச்சிட்ட விந்தை அவனுக்குத்தான் புரியும்: - நாட்டாண்மைக்காரர் அட்டகாசமாகவும் நிர்த் தாட்சண்யமாகவும் இப்போதும் ஆவேசச் சிசிப் பைக் கொட்டி முழக்கத் தொடங்கினர்: "இப்ப உன்னுேட அம்மான் என்ன செய்வாளும்?...நம்ப வீட்டு வைக்கோலே களவாணித்தனமாய் அவளுேட வெள்ளை தின்ன அநியாயத்துக்கு இனி அவன் என்ன ஈடு கட்டுவானம் எப்படி ஈடு கட்டப் போருளும்?... பார்க்கிறேன் ஒரு கை!' என்று சொற்களிலே நெருப்புத் துண்டங்களை வீசியெறிந்தவாறு, கொக் கரித்தார். - - -

அப்பாவோடு கூடி வீரமணியும் கொக்கரிக்கத் தலைப்பட்டான். 'அம்மானைப் பழிக்குப் பழிவாங் கக் கை கூடியிருக்கிற இந்தச் சந்தர்ப்பத்தைக் கைக்கு மேலே போட்டுக் கெட்டியமாய்ப் பிடிச் சிருக்க வேணுமிங்க அப்பா! அப்பத்தான், அம்மான் காரரோட மானம் மரியாதையெல்லாம் ஊர் முச்சந்திப் புழுதியிலே,சிரிப்பாய்ச் சிரிக்க ஏலுமுங்க!. ...ஆமாங்க அப்பா!...ஆயிரம் வந்தாலும் சரி, ஆயிரம் போனலும் சரி, அம்மானேட இந்த வெள்ளைக் காளையை பாவிமனுசன் அம்மான் கிட்டே திருப்பி விட்டுப் புடவே கூடாதுங்க, அப்பா!' என்று சிவப்பு விளக்கையும் ஏந்திக் காண்பிக்கத் தவறி விடவில்லே இளஞ்சிங்கம்.

“நல்லாச் சொன்னே, போ... ஆறுகரை ஆதி மூலத்தேவன இல்லே கொக்கான்னு உன் அம்மான்