பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

盟*5

'அட, கிழட்டுச் சிங்கமே! உமக்கு இம்மாம் கொழுப்பு ஏன் வந்திச்சு-எப்படி வந்திச்சு, அப்படின்னு நானும் ஒரு கை பார்த்துக் கிடுறேன்!...... ஊம்...! வார விதி ராத்தங்கவா போகுது?... கருநாகத்தைச் சீண்டி விட்டிருக்கீங்க, மச்சானே! இந்த நடப்பை மட்டும் நீங்களும் நெஞ்சிலே முடிச்சுப் போட்டுக்கிடுங்க. நீயும் மறந்: திடாமல் முடிச்சுப்போட்டு வச்சுக்கிடு, மாப் பிள்ளே!...” r r - -

சாவலுக்கு எதிர்ச் சாவல் வீசிய கையோடு,தன் அருமை வெள்ளேக் காளையை இரக்கத்தோடும் வெட்கத்தோடும் ஒரு முறை பார்த்துவிட்டு, கான் தூசியைத் தட்டி உதறிவிட்டு அங்கிருந்து நகரத் தொடங்கினர் ராமையாத் தேவர்.

சரிதான் போடாலே!... அடிபட்ட நாய் குறைக்கிறது வளமை தானேடா!'

அந்த வாயில்லாச் சீவனுக்கு வெள்ளைத்தன. மாக வாய்விட்டுக் கத்தக்கூட வாயில்லாமல் போய் விட்டது. :

வீரமணி எக்காளத்தோடு விழிகளை மீட்டுக் கொண்ட நேரத்தில், திட்டி வாசலின் மேற்புறத் தொங்கலில் ரத்தப்பூக்களின் காலடியில் என்னவோ பளிச்சிட்டுக் கண்ணேப் பறிப்பதை உணர்ந்து விழி வலையை வீசினன். - .

அங்கே: - கண்கள் இரண்டையும் பறித்துக் கொண் டிருந்த வைரச்சிமிக்கிகள் இரண்டு, அவனுடைய