பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

177

ஆத்மார்த்தமானதோர் ஆறுதல் எப்படியோ நிழலாடிய அதிசயத்தையும் அவனது மன அந்தரங்கம் வெகுசல்லாபமாக உணரவே செய்தது. ‘நல்ல வேளை; இந்த இரண்டு வைரச் சிமிக்கிகளும் அப்பாவோட கழுகுக் கண்களுக்குத் தப்பிடுச்சு, இல்லாங்காட்டி, இதுக ரெண்டும் இ ந் த ச் சென்மத்துக்கு எங்க அம்மாள் மகள் அன்னத், தோட கைக்குச் சேரவே வாய்க்காதாக்கும்!” என்று. அமைதியைக் கற்பித்துக் கொண்டிருந்த நேரத்தில் தன் தந்தையின் விளிப்புக் கேட்டதும், அவனுடைய தார்மீக மனமும் விழிப்புப் பெறத் தவறி விட, வில்லை.

‘அப்பா கூப்பிட்டீங்களா?”

நிதானமாகவே வீரமணி திரும்பினன்.

'ஊம்’, கொட்டினர் பெரியவர் ஆதிமூலத். தேவர்.

தன்னுடைய தந்தை ஊம்’ என்று குறிப்பிட்டு சத்தம் கொடுத்த அந்தப் பாவனை வீரமணிக்குத் துளிக்கூடப் பிடிக்கவில்லைதான்; அவரது கூர்மை யான பார்வையையுங் கூட அவன் அவ்வளவு தொலே வுக்கு விரும்பவும் இல்லை. நான் அன்னத்தின் வைரச் சிமிக்கிகளை நலியாமல் எடுத்து மறைத்துக் கொண்ட துப்பு ஒரு வேளை அப்பாவுக் குத் தெரிந். திருக்குமோ? அப்பாவுக்குத்தான் வெள்ளெழுத்தும் வரவில்லை - கறுப்பெழுத்தும் வரவில்லையே!” என்று மறுகினன். ஏதானும் விசேஷம் உண்டுங் களா, அப்பா?’ என்று வினவினன் அவன்.