பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

I 7.8

ஊர் அம்பலக்காரர் விநயமாகப் புன்னகை ஒட்டி ஒடுற பாம்பை மிதிக்கிற வயசுக்காரப் பிள்ளை. நீ. விசேஷம் எது வாயிருந்தாலும், அது உன்கிட்டேயிருந்து வர வேண்டியதுதான் நியாயம். தான் கிழவன். ஆனலும், பல்லுப் போகாதவன்; ஆனதாலே, சொல்லும் போகாது. அது சரி. கொஞ்ச முந்தி என்னத்தையோ குனிஞ்சு எடுத்தியே தம்பி: பணம் காசை அலட்சியமாகத் தொலைச் சிட்டுத் தேடி எடுத்தியா?’ என்று துருவினர் தேவர்.

இனிமேல், விடலை வீரமணி சுதாரித்துக் கொள்ளக் கேட்கவேண்டியதில்லை. 'ஊம்." என்று குரல் கொடுத்தான்-- ஒர் அமர்த்தலோடு. என்ருலும் அவனுக்குத் தன் அருமைத் தந்தையை முகம் கொடுத்துப் பார்க்கத் தைரியம் ஊற மறுத்தது. - - மறுபடி சிரித்தார் முதியவர். தலைமுடிகளைக் கேர்தி விட்டுக் கொண்டே, 'காசு பணத்தை இன்னிக்கு நாம காப்பாத்தினுல்தான், நாளைக்கு பணம் காசு நம்பளைக் காப்பாத்தும், தம்பி!' என்று புத்தியடித்துக் கொடுத்தார் அவர். -

"நிசம்தானுங்க, அப்பா. கை நழுவின காசுகளைக் கை கழுவி விடுவேனுங்களா? அதுகளையெல்லாம் சமர்த்தாகப் பொறுக்கி எடுத்துக்கிட்டேன். காசு பணத்தோட அருமை பெருமை உங்க மாதிரியே எனக்கும் புரியாதுங்களா?’ என்று ஒரு போடு: போட்டான் வீரமணி. சற்று முன் அப்பா சிரித்த