பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

| 9 |

சிவப்பை மேலும் பயங்கரமாக விளக்கிக் காட்டியது. வெள்ளி நிலா, அவர் கோபாவேசத்தோடு வீரமணியை விழுங்கி விடுகிற மாதிரி பார்த்தார்; பார்த்ததோடு சரி! - விழுங்கி விடவில்லை. மீசை யில் இடம் தெரியாமல் வந்து கு ந் தி ய ஈயை ஆத்திரம் சூடு பறக்க விரட்டிவிட்டு, தாழ். வாயை தடவியபடியோ அல்லது தடவிக் கொடுத். தபடியோ வாயைத் திறக்கலானர். -

அதற்குள்:

ராமையாத் தேவர் பொறுமை இழந்தவராக தட்டி மறைவினின்றும் வெளிப்பட்டார். தன்னு: டைய தேள் கொடுக்கு மீசையை நீவி விட்டவாறு. "நாட்டாமைக்கார ஐயாவே! உங்க அன்புப்பிள்ளை -என் அருமை மாப்பிள்ளை கேட்ட கேள்விக்குச் ‘சவாப் சொல்லுங்களேன்!' என்று நையாண்டிக்.

குரலிலே பேசினர்.

வீரமணி மலைத்தான். அடி மடியில் ஒளித். திருந்த அந்த வைரச் சிமிக்கிகளைக் கமுக்கமாக'த். தடவிப் பார்த்துக் கொண்டான். அவன் சிந்தனை எங்கெல்லாமோ, எப்படியெல்லாமோ சுழல ஆரம் பித்தது.

பெரியவர் ஆதிமூலம் எரித்து விடுகிற உத்தேசத். தோடு ராமையாவை விழி பிதுங்க விழித்துப்பார்த் தார்; கட்டுக் குடுமி நிலவுக் காற்றில் ஊசலாட, 'டேய், ராமையா!' என்று ஓங்காரமாகச் சிம்மக் குரலெடுத்துக் கூவினர் ஊர் அம்பலக்காரர்!